பக்கம்:தாய்மை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியத்தில் பாத்திரப்படைப்பு 227

அவர்கள் பா த் தி ர ங் க ைள வெறும் உருவங்களாக

மட்டும் காட்டாது, அவ்வுருவங்களின் உள்ளத்தை ஊடுருவிக் கண்டு நமக்குக் காட்டும் வகையில் தம் எழுத்தினை வ டி த் து ஸ் ள ா ர். உலவுகின்ற பாத்திரங்களாகிய சேவகன் தொடங்கி அல்லது சாதாரணப் படைவீரன் அல்லது மனிதன் தொடங்கி உயர்ந்த பாத்திரங்கள் வரை-நாடகத் தலைவன் தலைவிவரை யாவும் ஆசிரியர் கைப்பட்ட நிலையிலே வெறும் தோற்றத் தால் மட்டுமன்றிச் சொல்லால்-உணர்வால்-அசைவால் -பிற பிறழ்ச்சிகளால் வாழ்கைத் தத்துவத்தை நமக்குப் புலப்படவைக்கின்ற வகையிலே அமைவதைக் காண் கிறோம். வெறும் தோற்ற நிலையிலே நிற்கும் பேசாத ஒடையும் சுருங்கையும் நாங்கூழ்ப் புழுவும்கூட நம்முன் அவர் வழிப் பேசும் நிலைபெற்று-வேற்றுப் பாத்திரங்கள் வழி உயர்ந்த உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன. பேசாத நாங்கூழ்ப் புழுவை முன்னிறுத்தி நடராசன் வாக்கில்,

ஒகோ காங்கூழ்ப் புழுவே உன்பாடு ஓவாப்பாடே! உணர்வேன் உணர்வேன் உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும் உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ எம்மண் ணாயினும் கன்மண் ணாக்குவை விடுத்தனை இதற்கா எடுத்த உன் யாக்கை உழுதுழு துண்டுமண் மெழுகினும் கேரிய விழுமிய சேறாய் வேதித் துருட்டி வெளிக் கொணர்ந்தும் புகழ்வேண்டார்போல ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால் ‘ என்று காட்டி அப்பேசாத நாங்கூழ்ப் புழுவழி நல்ல ஒர் உண்மையினை ஆசிரியர் காட்டவில்லையா! இப்படியே கல்லும் மண்ணும் காடும் நாடும் ஊரும் உலகும் ஆகிய எண்ணற்ற பேசாப் பாத்திரங்களை முன்னிறுத்தி-பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/229&oldid=684779" இலிருந்து மீள்விக்கப்பட்டது