பக்கம்:தாய்மை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.226 தாய்மை

என்ற பாடல்கள் பாடி முடியவும் ஊரும் பேரும் உற்தி நெறியும் அறியா நிலையில் மறைந்திருந்த புருடோத்தமன் திரை நீங்கி வெளிவரவும் எவ்வளவு பொருத்தமாக அமை கின்றது. இந்தப் பாடலுடன் வாணி நம்மிடமிருந்து விடை பெற்று நடராசனை நாடிச் செல்கிறாள்.

நடராசன் ஒரு முக்கிய பாத்திரம்; நாராயணனும் அப்படியே, இவர்கள் இருவரும் நேர்மையின் இலக்கண மாகப் படைக்கப்பட்டவர்கள்; இறையருள் எண்ணிப் பழக்கப்பட்ட நல்ல உள்ளத்தால் ஆக்கப்பட்டவர்கள். பாத்திரங்கள் மட்டுமன்றி அவர்தம் பெயர்களும்அப்படியே

தத்துவக் கருத்தால் ஆக்கப்பட்டவையே.

இவர்களைத் தவிர்த்து இடையிடை நாடகத்தில் வரும் பாத்திரங்கள் பல. அவற்றுள் குடிலனின் மகன் பலதேவன் ஓர் அப்பாவியாகக் காட்சி தருகிறான். அவன் தன் குழ்ச்சிக்கு இணங்கவில்லையே என வருந்தி,

• பேய்ப்பயல் பேய்ப்பயல் எரிவதென்னுளம் உனை எண்ணும் தொறும்’ (IV 3 வரி 29) எனக் குடிலன் வாயிலாக மகனைக் காட்டிய ஆசிரியர், அம்மகன் வாயாலேயே குடிலனை,

பணம் பணம் என்றே பதைக்கிறாய் பிணமே” (IV 3 வரி 295) எனச் சொல்ல வைக்கிறார். மேலும் குடிலனின் கொடுமை உள்ளத்திலும் ஒரு பொது அறிவும் அறமும் உதிக்கும் நிலைகாட்டி கெட்டோரெல்லாம் கெட்டவரல்லர் அவர் திருந்தவும் கூடும் என்று தெருட் டவும் நினைக்கிறார் ஆசிரியர். அவனே தன்னைப் பிறர் பொருள் வெளவும் பேதையிற் பேதை (III 1 வரி 174) எனக் கூறிக்கொள்கிறான். இவ்வாறு வெறும் பாத்திரங் களாக மட்டுமன்றி அவற்றின் உள்ள உணர்ச்சிகளையும் சித்திரித்துக் காட்டுகிறார் ஆசிரியர். இப்படியே பிறபாத் திரங்கள் பற்றி அமையும் நிலையினையும் கற்போர் ஆங்காங்கே கண்டு மகிழ்வர். ஆசிரியர் சுந்தரம்பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/228&oldid=684778" இலிருந்து மீள்விக்கப்பட்டது