பக்கம்:தாய்மை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை 23


இறைவனுக்கும் அடியவர்களுக்கும் மேலாக ஏற்றிக் காட்டினும் அதை விளக்க முடியாது என்பதே. சிற்றின்பம் பேரின்பம் என்ற இரண்டும் உய்த்துணர்வார்க்கு உணர்ந்து மகிழ அமைவனவேயன்றி எடுத்துக் காட்டவோ எழுதிக் காட்டவோ முடியாதன.ஆம்தாய்மையின் பெருநிலைஇப்படியன்இந்நிறத்தன்இவ்வண்ணத்தன்இவன்இறைவன்என்றெழுதிக்காட்டொணாத கடவுள் நிலை போன்றதே. அகக்கண் அதன் உண்மையை-உயர்வை உணரும்.

சைவ அடியவர்களேயன்றி வைணவ அடியவர்களும் கூட இத் தாய்மையின் சிறப்பைப் பாடியுள்ளனர். கிறித்தவ மகமதிய பெளத்த சமண சமயத்தவர்களும் அதற்கு விதி விலக்கானவர்களல்லர். ஈண்டு ஓரிரு வைணவ அடியவர் தம் வாய்மொழி கண்டு அமைவோம்.

குலசேகர ஆழ்வார் கண்ணனையும் இராமனையும் குழந்தையாகக் கொண்டு பாடிய பாடல்களை மேலே நினை ஆட்டினேன். மணிவாசகர் விழைந்த கற்றாவின் மனம் போன்ற தாயுள்ளம் பெற்றவர் குலசேகரர். எனவே அவர் தாய்மை உள்ளம் இராமனையும் கண்ணனையும் குழந்தையாக்கிக் கொண்டது. வாய் பாடுகிறது.

  மன்னுயுகழ்க் கோசலைதன் மணிவயிறு
                       வாய்த்தவனே 
 தென்னிலங்கைக்கோன்முடிகள்சிந்துவித்தாய்
                      செம்பொன்னேர் 
  கன்னிகன்மா மதில்புடை சூழ்கணபுரத்தெங்
                        கருமணியே 
என்னுடையஇன்னமுதேஇராகவனேதாலேலோ!

என்று இராமனைப் பாராட்டிய வாய், பின் தேவகியாகி நின்று அவளால் பாராட்ட முடியா நின்ற நிலையை எண்ணிப் பாடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/25&oldid=1229700" இலிருந்து மீள்விக்கப்பட்டது