பக்கம்:தாய்மை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 தாய்மை



'இல்லடைக் தானுக்கு இல்லாத தொன்றில்லை

இல்லடைக் தானுக்கு இரப்பது தானில்லை 
இல்லடைந் தானுக்குஇமையவர்தாமொவ்வார்’
                                    (114) எனக் காட்டி, இல்லறத்தாரைத் தேவரினும் மேம்பட்டவர் எனப் புகழ்கின்றார். 

திருமூலர் இத்தாய்மை இன்பத்தைக் காட்ட முடியுமா என்பார்க்கு அளிக்கும் விடை அழகானது. அதுவும் தாய்மை அடிப்படையிலேயே அமைந்தது. இவ்வாறு உயிரும் இறைவனும் தாயாகி - தாயுள்ளம் கொண்டு வாழ்வது தெய்வநெறி-மெய் வாழ்க்கை’ என்றெல்லாம் சொல்கிறீர்களே, அதன் உணர்வு எத்தகையது எனக் காட்ட முடியுமா?’ என்று யாராவது கேட்டால் என்ன சொல்லுவது? இறைவனோடு நீயு நானுமாய் ஏக போக மாய் நின்ற நிலையை எப்படிச் சுட்டிக்காட்டுவது? தாய் தன் குழவியைத் தழுவி மகிழும் இன்பத்தினை எப்படி எழுதியோ வாக்கில் வடித்தோ காட்டமுடியும்? ஆயினும் சில பைத்தியக் காரர்கள்-தாய்மைக்கு இழுக்கு நினைக்க எண்ணும் கசடர்கள் கேட்பார்கள் போலும். புறநோக்கே கொண்ட அப்புன் தொழிலாளர் இப்படி திருமூலரையும் கேட்டிருக்கக் கூடும். அவர்களை நோக்கிய அப்பெருந்தகை,

  'முகத்தில்கண்கொண்டுபார்க்கின்றமூடர்கள் 
   அகத்தில் கண்கொண்டுபார்ப்பதேஆனந்தம் 
   மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய 
   அகத்தைச் சொல் வென்றால் சொல்லுமா 
                     றெங்கனே? (2944) என்ற பதில் வினாவையே விடுக்கின்றார். இந்த வினாவின் வழியும் தாய்மைக்குத் தன்னை இலக்காக்கிக் கொள்ளும் இல்லற மோம்பும் இளம் பெண்ணின் ஏற்றத்தையே காட்டுகின்றார்.இவற்றாலெல்லாம்நாமறிவதுறஇப்படிஎல்லாச்சமயத்தலைவர்களும்தாயன்பினை"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/24&oldid=1229698" இலிருந்து மீள்விக்கப்பட்டது