பக்கம்:தாய்மை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை 01

* சேயினும் கல்லன் அணியன்நல்லன்பர்க்குத்
  தாயினும் கல்லன் தாழ் சடையோனே' (8)

எனக்காட்டிஇரண்டுநிலைகளையுமஇறைவன்பால் சார்த்தி விளக்கம் தந்துவிட்டார். இனி, இறைவன் உயிர் களின் மலமாற்றிக் கருணை காட்டும் தாய்மை நிலையை எண்ணிய திருமூலர், “ தாயினும் மும்மல மாற்றித் தயா வெனும்

 தோயம தாயெழும் சூரிய னாமே'    (116)

என்கின்றார். இறைவனை இறைவிக்குத் தந்தையாய் மகனாய்க் காட்டிய தகவினை (1178) முன்னரே கண்டோம். அந்தஇறைவனும் இறைவியும் இப்படித் தாயாகித் தந்தையாகித் தாங்கும் நிலையில் உலகம் அனைத்தும் தாமாகி ஆடும் தன்மையினையும் அவ்வாடலில் தாய்மை உணர்வு ததும்பி நிற்கும் பெருமை. யினையும் திருமூலர் எத்தனை எத்தனையோ இடங்களில் காட்டிச் செல்கின்றார்.

தாய்மை அரும்பும் வாழ்வு இல்லறவாழ்வு.இந்த இல்லறமேநல்லறம்என்றஉண்மையைத்தான்திருவள்ளுவர்‘அறன்எனப்பட்டதே இல்வாழ்க்கை என அறுதியிட்டுக் காட்டி விட்டார். திருமூலரும் இந்தஉண்மையைஉலகுக்குத்திட்டவட்டமாகஉணர்த்துகிறார். சமயநெறிஎன்றால்துறவுதான் அடிப்படைஎன்பார்கொள்கையை நல்ல சமயத்தலைவர்கள்மறுத்துத்தான்உள்ளனர் பேராசையும் மையலில் மூழ்கும் செயலும் இவை போன்றவையும் வெறுக்கப்படுகின்றனவே ஒழிய கணவன் மனைவியராகக் கலந்து கடமை வழி ஆற்றும் இல்லறத்தை எல்லோரும் சிறப்புச் செய்கின்றனர்; அங்கே உண்மைத் தாயுளத்தை காணமுடியுமாதலால். திருமூலரும் இந்த உண்மையினை,

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/23&oldid=1229656" இலிருந்து மீள்விக்கப்பட்டது