பக்கம்:தாய்மை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 தாய்மை


தாயுள்ளத்தைநினைந்தஅதேவேளையில்அத்தாய்மை உள்ளம் நாமும் பெற்றால் தான் ஆண்டவன் அருளைப் பெற முடியும் எனக் கருதுகின்றார் அவர். எத்தகைய தாய் உள்ளம்! ஒருவேளை இருபதாம் நூற்றாண்டு நாகரிக மங்கையர் தாய் உள்ளத்தைப் பற்றி முன்னரே அறிந்தவர் போல, மனிதத் தாயுள்ளத்தை அவர் வேண்டவில்லை. ஈன்ற பசுவின் தாயுள்ளத்தையே அவர் வேண்டுகிறார்.

கன்றுபோட்டபசுவின்நிலையைக்கண்டுஉணர்பவர் மிகச் சிலரே. கன்று சன்ற ப்ோதில் அருகில் பழக் க மற்றாரை. ஏன்? - சில வேளைகளில் பழக்க முற்றாரையும் கூடப் பசு அண்ட விடுவதில்லை. பின் வளரும் காலத்தி லேயும் எங்கோ வெளியில் சென்று புல் மேய்ந்து வீடு திரும்பும் போது அம்மா’ என்ற ஒலியோடு அது மனை புகுகின்றது. கன்று அம்மே’ என அழைக்க, பசு அம்மா’ என்ற ஆர்ப்போடு தன் கன்றினைத் தேடி வருகின்றது. அதன் தாயுள்ளம் எத்தனை உயர்ந்தது: எண்ணிப் பார்த்தார் மணிவாசகர் - வாய் பாடிற்று.

"உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன்

                        பேர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும்
                        இனி அமையும் குற்றாலத்தமர்க்துறையும்கூத்தஉன்குரைகழற்கே கற்றாவின்மனம்போலக்கசிந்துருகவேண்டுவனே" 

என்பது அவர் வேண்டுகோள். இதன் வழி அடியவர் தாயுள்ளம் எத்தகையது என உணர முடிகின்றதன்றோ?

"தாய் சேய் என்ற இரு வகை யாக ஒன்றி. இணைந்தபாசத்தைக்கருதியதிருமூலர்இருவகைப்பட்ட அன்பினையும் இணைத்து, .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/22&oldid=1229654" இலிருந்து மீள்விக்கப்பட்டது