பக்கம்:தாய்மை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை 19

வேளையும் நேரமும் உடல் நிலையும் அறிந்து அனைத்துப் பாலூட்டுவது தானே தாயின் இயல்பு. இக்காலப் போலி நாகரிக வாழ்வில் தம்மைப் பாழ்படுத்திக் கொள்ளும் மங்கையரை நீங்கள் எண்ண வேண்டா. அது அநாகரிகக் காடு. அழுக்குச் சேறு. ஆனால் உண்மையில் மனிதப் பண்போடுகூடியதாயுள்ளத்தின்செயலே இது. (இன்றைய அறிவியல் ஆ ய் வா ள ர் அனைவரும்குழந்தைக்குத்தாய்ப்பாலே சிறந்த உணவு என முடிவு கண்டுள்ளனர்.) பாலைத் தாய் தன் சேயினுக்கு நினைந்து ஊட்டுவாள். இறைவன் அவளினும் மேம் பட்டவன் அவன் அளிக்கும் அமுதம் சாவா மருத்து, இதை எண்ணிய மணி மொழியார்,

'பால் கினைந்துாட்டும் தாயினும்சாலப்பரிந்துநீ

        பாவியேனுடைய 

ஊனினைஉருக்கிஉள்ளொளிபெருக்கிஉலப்பிலா

        ஆனந்த மாய  

தேனினைச் சொரிந்துபுறம்புறம்திரிந்தசெல்வமே

       சிவபெரு மானே

யானுனைத்தொடர்ந்துசிக்கெனப்பிடித்தேன்

                               எங்கெழுக் தருளுவதினியே"

எனப் பாடுகின்றார்.

மணிவாசகர் ஒருவகையில் மற்றவரை விஞ்சிச் செல்கிறார். அனைவரும் ஆண்டவனைத் தாயாகக்கண்டார்கள்;இவரும்கண்டார்.ஆயினும் ஒரிடத்தில் இவர் தாமே தாயாக வேண்டும் என்ற விழைவை வெளிப் படுத்துகிறார். ஆம்! தாய்மையின் ஏக்கம் எத்தகையதுஎனஉணர்ந்து பாடுகிறார்மணிவாசகர்.குழந்தைக்குஉற்றகாலத்தில்பாலூட்டித்தம்பிள்ளைக்குஊறுராவண்ணம்ஒருகுறையும்வாராமல்காக்கும்கடவுளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/21&oldid=1229497" இலிருந்து மீள்விக்கப்பட்டது