பக்கம்:தாய்மை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 தாய்மை


"தாயிலாகிய இன்னருள் புரிந்தவென்தலைவன்

                                 (சதகம்) என்றும்,
  • தாயானைத் தத்துவனைத் தானே உலகேழும்
                               ஆயானை 
                             (அம்மானை) 

என்றும்,

'தாயான ஈசற்கே சென்று தாய் கோத்தும்பி *

                          (தும்பி) எனறும்,
 'தாதாய் மூவேழுலகுக்கும் தாயே
                    (புணர்ச்சிப்பத்து) என்றும் பலவாறு பாராட்டுகின்றார். 
 மேலும் இறைவன் பெயரளவில் மட்டுமன்றி உண்மையிலேயே தாயிற் சிறந்த நிலையில் பரிந்து வந்து பாலூட்டிச் சி ற ப் பி க்கு ம் பண் பா ள ன் என்ற உண்மையினை,

'தாயாய்முலையைத்தருவாளேதாராதொழிந்தால்

                       சவலையாய 
நாயேன் அழிந்து போவேனோ கம்பி இனித்தான்
                              நல்காயே"

என்று விளக்குகிறார். பன்றிக் குட்டிகளுக்கும் பால் கொடுத்த சிறப்பினை மேலே கண்டோமல்லவா! ஆம்! நாமும் உண்மையில் நைந்து உதட்டாலன்றி உளத்தால் அழுதால் அவள் பரிந்து வந்து பாலூட்டுவாள் என்பது உண்மை,

குழந்தை வாய் திறந்து பால் வேண்டுமென்று கேட்காது.ஆனால்தாய்மைசும்மாஇருப்பதில்லைகுழந்தைஉறங்கினும்தாய்மைஉறங்குவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/20&oldid=1229493" இலிருந்து மீள்விக்கப்பட்டது