பக்கம்:தாய்மை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை 17

மாற்றுவான் என்னும் உண்மையைப் போற்றித் திருவகவலில் இவர் நன்கு விளக்கிக் காட்டுகின்றார். சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர் தாயேயாகி அவன் ஆட்கொள்ளும் நிலையில் அவ்வடியவர் ‘எந்நிலை பெறுவர் என்ற பெருஞ்சிறப்பை அவர் வாய் மொழி வழியே காணுதல் சிறப்புடைத்து.

       திருவடி யிணையைப் 

பிரிவினை அறியாது கிழலது போல முன்பின் ஆகி முனியா தத்திசை என்புனைந் துருகி கெக்குகெக் கேங்கி அன்பெனும் ஆறு கரையது புரள கன்புலன் ஒற்றி நாதனன் றரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப கரமலர் மொட்டித்து இருதய மலர கண்களி கூர நுண்துளி அரும்ப சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி'

 என்ற அடிகளில்அடிகளார்உயிரும்இறைவனும் எப்படித தம்மை மறந்த நிலையில் தாயும் சேயுமாகிக் கலந்து கூடிச் சிறந்து ஒன்றாகி உயர்கின்றனர் எனக் காட்டு கின்றரான்றோ!

, மணிவாசகர் பலவிடங்களில் இறைவனைத் தாயாகக் காட்டுகின்றார்.

தாயிற் பெரிதும் தாயவுடைய தம் பெருமான்’ -

                               (பூவல்லி) என்றும்,

'தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

                           (சிவபுராணம்) என்றும் தாயினும்மேலாகவும்அவ்விறைவனைக் கண்டு கருத்தழிகின்றார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/19&oldid=1229492" இலிருந்து மீள்விக்கப்பட்டது