பக்கம்:தாய்மை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 தாய்மை

நல்லூரில் ஆண்டு கொண்ட ஆண்டவனருட் கருணையை எண்ணும் போது அவர்தாயுள்ளம் புலனாகின்றது;வாய்விட்டுப்பாடுகின்றார்அவர்.

'தாயவளாய்த்தந்தையாகிச்சாதல்பிறத்தல்இன்ப் போயகலா மைந்தன் பொன்னடிக் கென்னைப்

  ‌                       பொருந்தவைத்த வேயவனார்வெண்ணெய்கல்லூர்வைத்தெனை
                          ஆளுங்கொண்ட நாயகனார்க் கிடமாவது நம் திருகாவலுரே
‘ என்று நம் திருநாவலூர் எனப் பிறந்த ஊரின் பெருமையை வீறு தோன்ற ப் பா டு கிறார். மற்றோரிடத்திலும் இறைவன் காட்சி தரக் காலந்தாழ்ந்த நிலையில் திருவருள் காட்டாய் என வேண்டும் போது, அக்காட்சி நல்க வேண்டிய கடன் அன்னைக்கு உண்டு என உணர்த்துவான் போன்று,

'அன்னையே என்னென் அத்தனே என்னென்

  அடிகளே அமையுமென் றிருந்தேன் என்னையும் ஒருவன் உளன் எனக் கருதி 
 இறை, இறை திருவருள் காட்டாய் . . 
                  (திருப்பாச்சிலாச்சிரமம்) என்று கசிந்து பாடுகின்றார். இவர் பாடல்கள் இன்னும் பல; விரிப்பிற் பெருகுமென்றஞ்சி மேலே செல்வோம்.

அழுதடி அடைந்த அன்பர் மணிவாசகர். அவர் தம்மையே பெண்ணாக்கிப் பாடிப் பெரு நிலை உற்றவர். அவர் ஆண்டவனைத் தாயாகக் கண்டு காட்டிய இடங்கள் பலப்பல. ஒரிடத்தில் அவனுடைய தாய்த் தன்மை-கருணை உள்ளம்-அரவணைக்கும் பெருநிலை எப்படிப்பட்டது என்பதைத்தன்னைமறந்துபாடுகிறார்மணிவாசகர். இனறவன் யாருக்கும் தாயாக உள்ளான். அனைவருக்கும் தான். ஆயினும் அதை உணர்வார் சிலரேயன்றோ ! ஆண்டவன் தன்னைத் தாயாகக் காணும் அன்பரை எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/18&oldid=1229491" இலிருந்து மீள்விக்கப்பட்டது