பக்கம்:தாய்மை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை 15

'சன்றாள் எ ன் றே இறவனைச் சிறப் பி த்துத் தம்மை மறந்து பாடுகிறார்.

'ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய் உடன் .

                           தோன்றினராய் மூன்றாயுலகம்படைத்துகந்தான்மனத்துள்ளிருக்க ஏன்றான். இமையவட்கன்பர்திருப்பாதிப்புலியூர் தோன்றாத்துணையாய்இருந்தனன்தன்னடியேங்
                               களுய்கோ என்பது அவர் திருவாக்கு

இவ்வாறு தாயாய் ஈன்றாளுமாய்க் கண்டு பாடுவது மட்டுமன்றி, ஆண்டவனைப் பெண்ணாகவே கண்டு: பாடுகிறார் அப்பர்.

  • பெண்ணவனை ஆணவனைப் பேடானானை
                         (கற்குடி)

என்றும்,

• பெண்ணவன்காண்ஆணவன்காண்

                          (கோளிலி) என்றும்,

பெண்ணாவன் பிறப்பிலியாய் கின்றாய் நீயே

                          (ஐயாறு) என்றும்,

பெண்ணுக்கு முதலிடம் தந்து அப்பெண்மை உருவாக உள்ள இறைவன் தன்மையையும் உடன் எண்ணுகிறார். அவர். இவ்வாறு சம்பந்தர் அப்பர் மட்டுமன்றி, அவர் தம் அடி ஒன்றி அவர் தம் புகழ் பாடிய சுந்தரரும் இறைவனைத் தாயாகக் கண்டு கசிந்துருகிப் பாடும் திறன் எண்ணத் தக்க ஒன்றாகும்.

    சுந்தரர் தம் திருநாவலூரைப் பற்றிப் பாடும் போதே இறைவனைத் தாயாகக் காண்கின்றார். வெண்ணெய்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/17&oldid=1229490" இலிருந்து மீள்விக்கப்பட்டது