பக்கம்:தாய்மை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தாய்மை



'தாயவனை வானொர்க்கும் ஏனோர்க்கும்
தலையவனை மலையவனை உலகமெல்லாம்
ஆயவனை சேயவனை அணியான்தன்னை'

(திருநாகேச்சுரம்)

என்றும்,

'தாயவன் காண் உலகிற்குத்தன்னொப்பில்லாத்
தத்துவன் காண்'

(கச்சிஏகம்பம்) என்றும்,

'தாயினும் நல்ல சங்கரர்'.

(பொது)

என்றும்,

“தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்
பேயனேனையும் ஆண்டபெருந்தகை
தேயநாதன் சிராப்பள்ளி மேவிய
நாயனாரென நம்வினை காசமே

(திருமலை-திருச்சி)

என்றும் இன்னும் பலவிடங்களிலும் தாயினுக்கே முதன்மை நிலை தந்து போற்றிப் பரவுகின்றார் அப்பர். இவையன்றி அப்பன்நீ அம்மைநீ என்றும் தந்தையாய்த் தாயுமானாய்’ என்றும் பலவிடங்களில் தந்தையை அடுத்துத் தாய்நிலை அமைத்துப் பாடிய பாடல்களும் பல. உண்மையில் மறுபிறவியே எடுத்தமைஒப்ப, சமணமாம்சமயம்விட்டுச்சைவசமயத்தைச்சார்ந்துஅச்சமணர்இழைத்தகொடுமைகளுக்கெல்லாம் தப்பிப்பிழைத்து இறுதியில் பாதிரிப்புலியூரில் கரைசேர்ந்தபோதுஆண்டவனைப்பெற்றவளாவே கண்டார் அப்பர். தாயார் பலவகை முறைகளில் அமையலாம்.வளர்ப்புத்தாய்எனஇலக்கியங்களில் பயில்கிறோமன்றோ ஆனால் பெற்றவள் ஈன்றவள் ஒருத்தியாகத்தானே இருக்கமுடியும் உண்மையில் மறுபிறவி எடுத்த அப்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/16&oldid=1233671" இலிருந்து மீள்விக்கப்பட்டது