பக்கம்:தாய்மை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை 25


பராமரிப்பதாகச் சொல்லிக் காலத்தைக் கழிக்கின்றனர். ஆனால் அங்கே தாய்மை யுணர்ச்சியைக் காண முடியாது என்பதைக் காட்டவே பெற்ற தாயினுமாயின செய்யும் என்கின்றார் திருமங்கையாழ்வார். -

குலசேகரர் அத்தாய் சில வேளைகளில் தன் குழந்தை திருந்த வேண்டி அடிக்கவும் வரும் நிலையை எண்ணிப் பார்க்கிறார். இறைவனிடம் முறையிடும் போதில் உடனே அவன் அருள வில்லை போலும்! குழந்தை கேட்டதை யெல்லாம் பெற்றோர் வாங்கித் தர முடியாதல்லவா? தேவையற்றது மட்டுமன்றித் தீமை பயப்பதாகவும் இருக்குமல்லவா? எனவே தாயறிவாள் குழந்தையின் தேவையை, அவ்வாறான நிலையில் குழந்தை சிறிதே தடுமாறினும் பிறகு பெற்றவளை விட்டுப் பிரியுமோ? அதே நிலையில் அடித்தாலும் அனைத்தாலும் ஆண்டவனே யன்றி வேறு கதியில்லை எனக் கண்ட குலசேகரர்,

"தருதுயரம்தடாயேலுன்சரணல்லால்சரணில்லை விரைகுழுவுுமதில்புடைசூழ்வித்துவக்கோடனே அரிசினத்தால்ஈன்றதாய்அகற்றிடினும்மற்றவள்தன் அருள் கினைந்து அழுங்குழவி அதுவே

                  ன போன்றிருந்தேனே 

என வித்துவக்கோட்டுப் பதிகத்தில் பாடுகின்றார். எனவே அடியவரும் ஆண்டவனும் தம்முள் பிணைந்த தாய்மைப் பாசத்தால் எதுவரினும், எது போயினும் சலியாது கட்டுப் பட்டு என்றும் இணைந்து இன்புறுவது உறுதி.

தமிழ்நாட்டுச் சமய நூல்கள் மட்டுமன்றி வடநாட்டுச் சமய நூல்களும் இந்தத் தாய்மையின் சிறப்பை வற்புறுத்து கின்றன. இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடும் பகவத் கீதையிலே கி ரு ஷ் ண ன் வாக்காகவும் அருச்சுனன் வாக்காகவும் இத்தாய்மை உணர்வு நன்கு காட்டப்பெறு கின்றது. அதில் இறைவனாகிய தாய்க்கும் உயிர்களாகிய சேய்க்குலத்துக்கும் உள்ள வேறுபாடும் நன்கு உணர்த்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/27&oldid=1229704" இலிருந்து மீள்விக்கப்பட்டது