பக்கம்:தாய்மை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தாய்மை

பெறுகின்றது. தாய் தன் குழந்தையின் நிலையினையும் தனக்குரிய கடமை, தொடர்பு முதலியவற்றையும் நன்கு உணர்வான். ஆயினும் குழந்தை அந்தத் தன்மைகளைஏன்?- தாயின் தன்மையைக்கூட உணர முடியாதே. உலகத்துக்கும் உயிர்களுக்கும் இவற்றின் தாயான இறைவனுக்கும் உள்ள தொடர்பினைக் கீதை பல வகை களில் காட்டுகின்றது. கண்ணன் வாக்கிலேயே காணலாம்.

புகலிடம், வளர்ப்பவன், சான்று, உடையவன். இருப்பிடம், அடைக்கலம், தோழன் பிறப்பிடம், ஒடுங்கு மிடம், தங்குமிடம், க ள ஞ் சி ய ம், அழியாதவித்து அனைத்தும் நானே’ . (9.11)

“நான் அனைத்துக்கும் பிறப்பிடம்; யாவும் என்னிடத் திருந்தே விரிகின்றன. இதை அறியும் ஞானிகள் அன்புடன் என்னை வழுத்துகின்றனர்”. (10.87)

சிருட்டிப் பொருள்களுக்கு கான் ஆதி, கடு,

அந்தமாயிருக்கிறேன். (10.32) எல்லா உயிர்களுக்கும் வித்து எதுவோ அது கான்.

(10.39) என் வலியால் நான் பூமியினுள் புகுந்து உயிர்களைத்

(தாயாகத்) தாங்குகின்றேன். (10. 13) சென்றனவும் இருப்பனவும் வருவனவுமாகிய எல்லா உயிர்களையும் நான் அறிவேன்; ஆனால் அவை

  • என்னை அறியா. (7. 20) என்றெல்லாம் கண்ணன் உலகுக்குக் காட்டியதாகக் கீதை கூறுகிறது. இக்கருத்துக்களை அருச்சுனன் வாக்காலும் அந்நூல் உலகுக்கு வெளியிடுகிறது.

தாம் இச்சராசரமாகிய உலகுக்குத் தந்தை.” .

- (11. 43)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/28&oldid=684788" இலிருந்து மீள்விக்கப்பட்டது