பக்கம்:தாய்மை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 27

மைந்தனுக்குத் தந்தை போன்றும் தோழனுக்குத்

- தோழன் போன்றும் காதலிக்குக் காதலன் போன்றும் பொறுத்தருளக்

கடவீர் ‘ (11. 44)

என்றும் இன்னும் பல வகைகளிலும் இருவர் வாக்கினும் இறைநிலை, உயிர்நிலை பற்றிய விளக்கங்களைக் கீதை தருகின்றது. தமிழ் இலக்கியங்கள் போன்று தாய்மைபற்றிய அத்துணை விளக்கம் அதில் இல்லையாயினும் அம்மரபினர் கொள்ளும் தந்தை முறை அடிப்படை அதில் சார்ந்து நிற்பதைக் காண்கின்றோம். (இன்று மேலை நாட்டினர் அம்முறையினைப் பின் பற்றுகின்றனரன்றோ?) இவற்றால் மகப்பெறு நிலையில் வாழும் உயிர்ச் சமுதாயம் - சிறப்பாக அறிவறிந்த மக்களைப் பெற்றெடுக்கும் மனித சமுதாயம் - உலகில் சிறந்ததென்பதும் அதற்கு அடிப்படை தாய்மை உணர்வே என்பதும் தேற்றம்.

இவ்வுலகம் என்று தோன்றிற்றோ அன்றே தாய்ம்ை உணர்வு அரும்பிவிட்டது. தோற்றம் என்பதே தாய்மை யைக் காட்டுவது. எனவே தாய்மை கடவுளைப் போன்று பழையதினிற் பழையதாய்ச் சிறந்து ஓங்கி உயர்வதாகும். இன்று சிலர் இத்தாய்மைப் பண்பினை வெறுக்கின் றனர். சிலர் மணம் புரிந்துகொள்ளவும் அஞ்சுகின்றனர். உலகில் பொருளே முதலிடம் பெற்ற காரணத்தால் பிற நல்ல வாழ்வின் அடிப்படைகள் வெறுக்கப் பெறுகின்றன.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் கன்மக்கட் ப்ேறு ‘ பெறுவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிக்த மக்கட்பேறல்ல பிற . f என்று வள்ளுவர் இல்லற வாழ்வையும் அவ்வாழ்வின் அடிப்படையில் அமைந்த காதல் சிறப்பையும் அதன் வழித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/29&oldid=684789" இலிருந்து மீள்விக்கப்பட்டது