பக்கம்:தாய்மை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

28 தாய்மை

தோன்றும் மக்கட் செல்வத்தையும் உலகுக்கு உணர்த்து கின்றார். உலகம் இதை உணர்ந்து வாழ்கின்றது என்றாலும் சிலர் இவற்றை வெறுப்பதைக் காண்கிறோம்.

ஒரு பக்கம் துறவியர் என்பார் இந்த இல்லற வாழ்வை வெறுத்துப் பேசுகின்றனர். ஆயினும் அத் துறவியருள் பெரும்பாலோர் கூடா ஒழுக்கத்தைக் கொண்டே வாழ்வது உலகறிந்தது. ஆகவே அவர்கள் இல்லறத்தை வெறுப்பது வெறும் மேற்பூச்சேயாம். ஆயினும் இல்லற வாழ்வு மரபில் இருந்துகொண்டே சிலர்-சிறப்பாகப் பெண்கள், மணத்தை வெறுப்பதாகக் காட்டுவதும் தாய்மையை இகழ்வதும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை தாமா? எண்ணிப்பார்க்க வேண்டும். சிலபெண்கள் தாங்கள் அதிகமாகப் படித்த காரணத்தாலேயே மணமாகித் தாய்மையின் பத்தில் வாழும் பெண்களைப் பழித்தும் பேசு கின்றனர். இன்று நாட்டின் மக்கட் பெருக்கத்தைத் தடை செய்ய அரசாங்கத்தார் மேற்கொண்டுள்ள கருத்தடை முறைகள் சரியா தவறா என ஆராய நான் இங்கு முன் வரவில்லை. காலம் அதற்குத் தக்க பதில் சொல்லப் போகிறது. தலைக்கேற்ற குல்லாயா? குல்லாய்க்கேற்ற தலையா? இதற்கு விடையும் வேண்டுமோ? இயற்கை எந்த அளவு உயிரினத்தை ஏற்றுத் தாங்குமோ அந்த அளவு தாங்கும்; அன்றேல் அதுவே இயற்கை மாறுபாடுகளை உண்டாக்கித் தேவையை நிறைவு செய்துகொள்ளும். எனவே நான் அக்கருத்தடையைப் பற்றி ஒன்றும் கூற விரும்பவில்லை. ஆனால், வாய்ப்பிருந்தும் வாழ வகை யிருந்தும் வறண்ட வாழ்க்கை வாழும் சிலர்தம் தாய்மை அற்ற கொடுமைகளை எண்ணும்போது வருத்தம்தான் உண்டாகின்றது. -

தாய்மை தெய்வத்தை ஒத்தது எனக் கண்டோம்ஏன்? தெய்வமே எனக் கண்டோம். அத்தெய்வ வாழ்வை ஒதுக்குவார் யாவர்? தெய்வ உணர்வுக்கு மாறுபட்டவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/30&oldid=684791" இலிருந்து மீள்விக்கப்பட்டது