பக்கம்:தாய்மை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நாடகக் கலையும் நாட்டுக் கல்வியும்

தொன்றுதொட்டு வளர்ந்துவரும் தமிழ் மொழியில் நாடகம் சிறந்த இடம் வகிக்கின்றது. தமிழையே முத்தமிழ் எனப் பெயரிட்டு, இயல், இசை, நாடகம் எனப் பிரித்து, அதன் பெருமையைக் காத்தனர் பண்டைத். தமிழர். எனினும் இடைக் காலத்தில் உண்டான எத்தனையோ மாற்றங்களால் இசையும் நாடகமும் நிலை கெட, இயற்றமிழ் ஒன்றே நிலைபெறலாயிற்று. ஆயினும் அவை இரண்டும் முற்றும் நாட்டை விட்டு நீங்கி விட வில்லை, இசை முதலியவற்றை வெறுத்தொதுக்கும் ஒரு சில சமய நெறிகள் நாட்டில் சிறந்திருந்தகாலை அவற்றின் ஆதிக்கத்தால் ஒ ர ள வு நி ைல கெட்டிருந்த, போதிலும், அவை கால வெள்ளத்தில் எதிர் நீச்சலிட்டு. ஓரளவு தம் வாழ்வைக் காப்பாற்றிக் கொண்டுள்ளன என்பது தெளிவு. எனவேதான் இன்றும் தமிழ் இசை போற்றும் பாவாணரும் நாடகம் போற்றும் நல்லவரும் நம்மிடை வாழக் காண்கிறோம். அவர் தம் தொண்டு. துவங்கிச் சிறக்க என வாழ்த்துகின்றேன்.

கலை என்பது உள்ளத்தைப் பிணிப்பது, தன்னை மறக்க வைப்பது; சோர்வு நீக்குவது; மெய்த் துணைவன். ஆவது. எனவேதான் தமிழர் மட்டுமன்றி எந்நாட்டவரும் தத்தம் கலையைப் பொன்னேபோல் போற்றிப் பாது: காக்கின்றனர். தமிழ்நாட்டில் கலைகளைப் பல வகையில் பகுத்துக் கண்டனர்; கற்றறிந்தனர். கல்லில் கலை கண்டனர்; காட்சியில் கலை கண்டனர்; சொல்லில் கலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/33&oldid=684796" இலிருந்து மீள்விக்கப்பட்டது