பக்கம்:தாய்மை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தாய்மை

கண்டனர். ஏன்? கட்டும் கட்டடத்திலும் உண்ணும் உணவு நெறியிலும், உடுக்கும் உடையிலும்கூட அவர்தம் கலைவண்ணம் காணலாம். கடவுளையும் கலையாகவே கண்ட பெருமை தமிழர்க்குரியது. கலைமகள் வடிவத்தைச் சுட்ட வந்த பாரதியார் எங்கேங்கே கலை நலம் உண்டோ அங்கங்கே கலைமகளைக் காணலாம் எனப் பாட்டிசைத் துள்ளார். .

  • மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்

மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலில்

கிளியின் காவில் இருப்பிடங் கொண்டாள் கோதகன்ற தொழிலுடைத் தாகிக்

குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள் - இன்பமே வடிவா கிடப் பெற்றாள் : என்பது அவர் வாக்கு. ஆம்! இத்தகைய தெய்வ நலம் சான்ற கலைகளுள் தலைசிறந்தது நாடகக் கலையாகும்.

உள்ளத்தைப் பறிகொடுத்த பல்லாயிரக் கணக்கான மக்களை ஒருசேரத் தன் வசம் ஈர்ப்பது நாடகக் கலை யாகும். இது தொல்காப்பியனார் காலத்துக்கு முன் பிருந்தே தமிழின் அங்கமாய் சிறப்புற்றிருந்ததாகும். உலகியலை ஒட்டி, உலகியல் நேரடியாக உணர்த்த முடியாத உ ண் ைம க ைள யு ம் உணர்த்தி, வாழ் வார்க்கு வழிகாட்டும் பெரு நெறி பற்றி வளர்த்த ஒன்றாகும்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம் எனத் தொல்காப்பியனாரே சுட்டிக்காட்டுவது போன்று, நாடகக்கலை தொன்மையும் தூய்மையும் வாய்ந்த ஒன்றாகும். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/34&oldid=684798" இலிருந்து மீள்விக்கப்பட்டது