பக்கம்:தாய்மை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கல்வியும் நாட்டுக் கல்வியும். 33:

இத் த ைக ய நா ட க க்க ைல உரிய அளவில் போற்றப் பெறவில்லை என்பது கண்கூடு. இடைக் காலத்திய இராசராசன் போன்ற பெருமன்னர்களும் பிற சிற்றரசர்களும் இந்நாடகக் கலை யை ப் போற் றி வளர்த்தார்கள் என்பது உண்மையாயினும், இது பழங். காலத்திய பாணர் கூத்தர் விறலியர் வளர்த்துப் போற்றிய அளவில் போற்றி வளர்க்கப் பெறவில்லை என்பது தெளிவு. நாடகக்கலை வளர்ப்பதற்கெனவே வாழ்ந்த கூத்தரும்: விறலியரும் ஊர்தொறும் சென்று, மன்னரிடத்தும் மக்களிடத்தும் தம் நாடகக் கலையின் சிறப்பினைக் காட்டியமை அறிகின்றோம். கூத்து’ என்னும் செய் தொழிற் பெயராலே தம்மைக் கூத்தர் என அவர்கள் அழைத்துக் கொண்டமையே அவர்கள் அக் கலையைப். போற்றிய நெறியை நமக்கு உணர்த்தும். இவ்வாறு நாடக. மெனவும் கூத்தெனவும் போற்றப்பெற்ற ஒரு தெய்வக் கலை பிற்காலத்தில் கோயில் தோறும் குடிகொண்டிருந்த, நிலையை அறிகிறோம். நீண்ட சுற்றுப்பிரகாரங்களே நாடக அரங்கங்களாகப் பல கோயில்களில் இருந்தமையை நம்மால் எண்ணிப் பார்க்க முடிகின்றதன்றோ! நடன மாகிய பரதமும் நாடகமாகிய கூத்தும் நடைபெறாத கோயில்கள் இல்லை என்னுமாறு, தமிழ்நாட்டுத் தெய்வக். கோயில்கள் இடைக் காலத்தில் சிறக்க வாழ்ந்தன. இயற்கையினிடத்தும் இக்கலையைக் கண்டு போற்றிய அடியவர் பலர். -

  • வரைசேரு முகில் முழவ மயில்கள் பல கடமாட

. . வண்டு பாட

விரைசேர் பொன் இதழி தர மென்கரத்தாள்

- கையேற்கும் மிழிலை “ என ஞானசம்பந்தர் திருவிழிமிழலையில் இயற்கை நடனத்தையும் அதற்கு அங்கமாகிய முழவு, பாட்டு முதலியவற்றையும் காட்டி, அந் நடனத்துக்கு இயற்கை யளித்த பரிசாகிய பொன்’ பற்றியும் குறிக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/35&oldid=684799" இலிருந்து மீள்விக்கப்பட்டது