பக்கம்:தாய்மை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. தாய்மை.

இதே தெய்வக் குழந்தை ஊர்தொறும் உள்ள கோயில் களில் தொழ வரும் பெண்கள் நடனமாடுவர் என்ற குறிப்பைத் திருவையாற்றுப் பதிகத்தில்,

வலம் வலந்த மடவார்கள் கடமாட முழவதிர

மழைஎன் றஞ்சிச் - சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும்

திருவையாறே ‘

எனக் காட்டுவர். இவ்வாறு பல்லவர் காலத்திலே சிறந்திருந்த நடனமும் நாடகமும் பிற்காலச் சோழர் காலத்தில் மிகவும் போற்றப்பெற்றன என்பதனை அக் காலத்தில் வடித்த சிற்பங்களினாலும் பல கல் வெட்டுக் களினாலும் நன்கு அறிகிறோம். பெருமன்னன் இராச ராசன் அமைத்த தஞ்சைப் பெரிய கோயிலில் நாடக விழாவே சிறக்க நடைபெற்றமை கண்கூடு. பின் வந்த பெருமன்னர்கள் காலத்தும், வேற்று நாட்டவர் வாழ்ந்த, காலத்தும் இக்கலை போற்றப் பெற்றமையை அக்காலங் களில் எழுந்த இலக்கியங்கள், கல் வெட்டுக்கள், கலைக் கோயில்களின் வடிவங்கள் ஆகியவற்றின் வழி நன்கு உணர்ந்துகொள்கிறோம். இவ்வாறு வரலாறு காண முடியாத அந்தப் பழங்காலந்தொட்டு இன்றுவரையில் நாடகம் - நாடகத் தமிழ் நாட்டில் சிறக்கப் போற்றப் பெற்றதென்பதைக் காண்கிறோம். எனினும் இராமநாடக கீர்த்தனை போன்ற ஒருசில பிற்கால இலக்கியங் களைத் தவிர்த்து, பழங்கால நாடக நூல்களையும் அந்நூல்களைப் பற்றிய இலக்கண ஆய்வு நூல்களையும் நம்மால் காண முடியவில்லை. அண்மையில் வாழ்ந்த பம்மல் சம்பந்த முதலியார், பரிதிமாற் கலைஞர் போன்றோரால் ஓரளவு நாடக நூல்கள் நாட்டில் தவழ ஆரம்பித்தமை அறிவோம் அவர்களைப் பாராட்டி தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் விழா எடுப்பது சிறந்ததும் போற்றற்குரியதுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/36&oldid=684802" இலிருந்து மீள்விக்கப்பட்டது