பக்கம்:தாய்மை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கல்வியும் நாட்டுக் கல்வியும் 35

பண்டு தொட்டுத் தமிழ்நாட்டில் வாழ்ந்த இந்தக் கலையினைக் கல்வியொடு தொடர்பு படுத்த யாரும் முயல வில்லை என எண்ணுகிறேன். முற்காலத்தும் இடைக் காலத்தும் இக்கலைகளாம்-இசை நாடகங்களை நடத்தத் தனிக் கல்லூரிகளும் பள்ளிகளும் இருந்ததோடு, பொதுக் கல்வியிலும் இவற்றிற்கு இடமளித்திருந்தார்கள் என எண்ண இடமிருக்கின்றது. வீடு தோறும் கலையின் விளக்கம்’ என்ற பாரதி வாக்கு மெய்யாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆயினும் வீடுகள் மட்டுமன்றிப் பொது விடங்களிலும் கலை நலம் குன்றிய நிலையினை நாம் காண் கிறோம். கலை என்ற பெயரால் என்னென்ன் கொடுமை களையோ நாட்டில் உலவ விடும் நாகரிக உலகில் நம் நாடும், பண்டைக் கலைகளைப் பார்க்காமல்-பிறவற்றை “கலை” என்ற பெயரால் வளர்ப்பதாக நினைத்துத் தன் பெயரையும் கெடுத்துக்கொள்கிற கல்விக் கூடங்களிலே இக்கலைகளுக்கு இடமில்லை. உரிமை பெற்றபின் நாட்டு அரசாங்கங்கள் இவற்றை வளர்ப்பதற்கெனப் * பல அமைப்புக்களை நிறுவின. எனினும் அவற்றால் பெரும் பயன் விளையக் காணோம். சிலவிடங்களில் நாடகக் கலை வளர்க்கும் பயிற்சிப் பள்ளிகள் உள என அறிகிறேன். ஆயினும் அவற்றுள் பயில்வார் பிற்காலத்தில் அவ்வக் கலைகளில் சிறந்துள்ளனரா எனக் காணின் அரிதாகவே முடிகின்றது.

நாட்டுக் கல்வியைப் பல வகையில் திருத்தி அமைக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் தற்போது பெரு முயற்சி செய்துவருகின்றன. எனினும் கற்கும் மாணவர் உள்ளங்கள் தெளிவு பெற வழியைக் காணோம். மாறாக மாண்வர் களிடமும் அமைதி இன்மை, வேலை நிறுத்தம் முதலியன நிகழ்வதைக் காண்கிறோம். நாட்டுக் குடியரசுத் தலைவர் தொடங்கி, கட்சியின் கடைசித் தொண்டன் வரையில் இவற்றைச் சுட்டிக் காட்டி, இவற்றை நீக்கவேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/37&oldid=684804" இலிருந்து மீள்விக்கப்பட்டது