பக்கம்:தாய்மை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. தாய்மை

எனப் பேசுகின்றனர். ஆயினும் செயளலவில் ஒன்றும் நடக்கக்கணோம். காரணம் என்ன?

கல்வி நாட்டின் கண் போன்றது. கற்பாருக்கு அது வழிகாட்டியாக அமைவது. கற்றவர்தம் வாழ்நாளில் மட்டுமன்றி, ஏழேழு பிறவியிலும் அக் கல்வி ஏமாப் புடைத்து என வள்ளுவர் கூறுகின்றார். அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பது கல்வி. நாட்டுப் பண்பாடும் கலையும் நாகரிகமும் இன்ன பிற நல்வியல்புகளும் இழைந் தோடும் வகையில் இக் கல்விமுறை அமைதல் வேண்டும். பண்டைக் காலத்திய குருகுல வாசம் அந்த வகையில் அமைந்திருந்த சிறப்பைக் கடந்தகால வரலாறு நமக்குக் காட்டுகின்றது. ஆனால் இத்தகைய கல்வி இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக, அவ்வப்போது தேவை இல்லாத மாற்றங்களுக்குட்பட்டு, கற்பாருக்கும் கற்பிப் பாருக்குமே தொடர்பு இல்லாத வகையில், நாட்டு மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்காகக் கொள்ளை கொண்டு பெயரளவில் வாழ்கின்றது. எத்தனைப் பள்ளிகள் கட்டினோம் என்று கூறுவது பெருமைக்குரியதே. ஆனால் அவற்றுள் எத்தனை பேர் தெளிந்த தேவையான-நாட்டுப் பண்பின் அடிப்படையான கல்வியைக் கற்றார்கள் எனக் கணக்கிட்டுக் காட்டுவது அதனினும் சிறந்த பெருமைக் குரியது என்பதை எண்ண மறுகிறார்கள். சற்றே எண்ணினால் என்ன செய்யவேண்டும் என்பது புலனாகும்.

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின்

கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்

அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்

வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்

வாழு.காட்டில் பொருள் கெடல் கேட்டிலார்

துணியும் ஆயிரம் சாத்திரம் கற்கினும்

சொல்லுவார் எட்டுனைப் பயன் கண்டிலார் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/38&oldid=684805" இலிருந்து மீள்விக்கப்பட்டது