பக்கம்:தாய்மை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கல்வியும் நாட்டுக் கல்வியும் 37

என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அடிமை நாட்டுக் கல்வியைப் பற்றிப் பாரதி பாடியது இன்றும் மாற வில்லையே. உரிமை பெற்று வெள்ளி விழாவும் கொண்டாடிவிட்டோம். ஆனால் அடிமை நாட்டுக் கல்வி முறை கடுகளவும் மாறவில்லையே. 2 + 2 = 4 என்பதற்குப் பதில் 1+3=4 என்ற கணக்குமுறை மாறி இருக்கலாம். கற்கும் தரம் முன்னினும் குறைந்தே உள்ள தென்பதை நாடு அறிகின்றது. இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? ஆம்! நம் நாட்டு கல்வியில் நம் பண் பாட்டின் நிலைக்களங்கள் இடம் பெறாமையேயாகும். குருகுல வாழ்வில் அவை இடம் பெற்றிருந்தமையால் அக்காலக் கல்வி சிறந்ததெனப் போற்றுகின்றனர். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் நல்லது. ஆனால் அதையும் நாம் சரிவரச் செய்யவில்லை. அத்துடன் அதற்கு மேலாக நம் பழக்கங்கலை நாட்டு கல்வி'யில் இடம் பெறச் செய்தல் வேண்டும். நாட்டுக் கல்வி என்பது பெயரளவில் அன்றி உண்மையில் நம் நாட்டுக் கல்வியாகவே இருத்தல் வேண்டும். கண்டவற்றிற்கெல்லாம்-உ ண் ணு ம் உணவு, உடுக்கும் உடை, நடிக்கும் நடிப்பு, பாடும் பாட்டு இவற்றிற் கெல்லாம் பிறரைக் கண்டு காப்பி அடிக்கும் முறை தேவை யற்றதாகும். சிறப்பாகக் கல்விமுறை நாட்டுப் பண்பாட்டு அடிப்படையில் அமைதல் வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தமிழ் மொழி, தமிழ்க்கலை - தமிழ் இசை - தமிழ் நாடகம் - தமிழ்ப்பண்பாடு இவற்றைத் தழுவியே கல்வி முறை அமைதல் வேண்டும். இந்த உண்மையை மனத்தில் கொண்டுதான் நாட்டின் சட்ட திட்டங்கள்ை வரையறுத்த சட்ட வல்லுநர் கல்வி யை மாநிலத்துக்கு உரிய பொருளாக்கினார். பல்வேறு கலை களும் பண்பாடுகளும் கூடிய இந்திய நாட்டு அரசாங்கத் தி ம் கல்வி ஒப்படைக்கப்படுமாயின் அவ்வந்நிலத்துப் பண்பாடு, கலை முதலியவற்றை அக் கல்விமுறையில்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/39&oldid=684807" இலிருந்து மீள்விக்கப்பட்டது