பக்கம்:தாய்மை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தாய்மை

முக்கிய இடம் பெறச் செய்ய இயலாது என்பதை அறிந்தே அந்த வகையில் வரையறை செய்தனர், எனினும் இந்நாள்வரையில் நாம் அந்த வகையில் கல்வியைத் திருத்தி அமைத்தோமா? இல்லையே! .

நாட்டுக் கலைகளும் நாடகம் போன்ற துறைகளும் ஆரம்பப்பள்ளியின் பாடத்திட்டத்திலேயே இடம் பெற வேண்டும். சில ஆண்டுகளுக்கு அதன் திறன் அறிந்தபின், பிள்ளைகள் மேல் வகுப்பிற்கு வரும்போது அ த ன் வளர்ச்சிக்கான உயர்பகுதிகளை மெல்ல மெல்ல, உயர் நிலைப்பள்ளி, கல்லூரி ஆகியவற்றுள் பாடமாக அமைக்க வேண்டும். பல்கலைக் கழகங்களில் இசைப் பகுதிகள் இருக் கின்றன எனினும் அவற்றால் பயன் பெறுவோர் மிகச் சிலரே. பயிலும் மாணவர் பலரும் பயன் பெறு வகையில் அவ்விசைத் துறையில் பாடத்திட்டம் பலபட்டப்படிப்பு களுக்கும் உரிமையாக்கப் பெறல் வேண்டும். இசைக்கு உள்ள இடம் நாடகத்துக்குக் கிடையாது. மூன்றில் ஒரு பகுதியாக இருந்த நாடகத் தமிழ் தமிழ்நாட்டுக் கல்வி முறையில் இடமே பெறாதது வியப்புக்குரிய ஒன்றாகும்! நாடகங்களைப் பாடமாகப் படிக்கும் வாய்ப்பு அண்மை யிலேயே புகுத்தப்பெற்றது.

சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந் நாடகத் துறையில் ஊக்கங்காட்டினர். பச்சையப்பன் கல்லூரியிலேயே அத்துறை நன்கு போற்றப் பெற்றது. போட்டி நாடகங்கள் நடத்தப்பெற்றுச் சிறந்த வற்றிற்குச் சுழற் கோப்பையும் திறன்மிக்க நடிகர்களுக்குத் தனிப் பரிசுகளும் வழங்கப்பெற்றன. சென்னை நகர்க் கல்லூரிகளில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொள்ள, அப் போட்டிவிழா மூன்று அல்லது நான்கு நாட்கள் கல்லூரியில் நடைபெற்றது. அப்படியே பொறி யியற் கல்லூரியிலும் பிற வேறுசில கல்லூரிகளிலும் போட்டி நாடகங்கள் நடத்தப்பெற்றன. ஆண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/40&oldid=684811" இலிருந்து மீள்விக்கப்பட்டது