பக்கம்:தாய்மை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கல்வியும் நாட்டுக் கல்வியும் 39

கல்லூரிகள் மட்டுமன்றி மகளிர் கல்லூரிகளும் அவற்றில் ப்ங்கு கொண்டன. உண்மையிலே நாடகம் பாடத் திட்டதில் ஒன்றாக அமைந்துவிட்டதோ என எண்ணி மகிழ்ந்தோம். ஆயினும் எங்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஒருசில ஆண்டுகளில் பல கல்லூரிகள் பங்குகொள்ள முன் வரவில்லை. பின் இப்போட்டி நிகழ்ச்சிகள் முற்றும் நின்று விட்டன. காரணங்களை ஈண்டு அலசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒன்று மட்டும் உண்மை. இத்தகைய கலைகள் அவர்தம் பாடத் திட்டங்களில் இடம் பெற்றாலன்றி, அவர்கட்கு ஊக்கப் பிறக்காது என்ற உண்மைதான் அது.

எத்தனையோ வகையான பாடத்திட்டங்கள் ஆரம்பப் பள்ளி முதல் முதுகலை வகுப்பு வரையில் புகுத்தப்பெறு கின்றன. அவற்றுள் பயில்கின்றார் அத்துணை பேரும் பயின்ற அதே துறையில் பணியாற்றச் செல்லுவதில்லையே ஏன்? நூற்றுக்குப் எண்பதுக்கு மேல் கற்ற கல்விக்குச் சம்பந்தமில்லாத வகையிலேதான் பணியாற்றுகின்றனர். இதற்குக் காரணம் நாட்டுக்குத் தேவையில்லாத கல்விமுறை-ஆங்கிலேயன் அடிமை வாழ்வை நிலை நிறுத்தப் புகுத்திய கல்வி முறை-இன்றளவும் வாழ்வது தான். இனியாவது இத்தகைய கல்விமுறையை மாற்றி, பயில்வோர் நாட்டுப் பண்பாட்டு நெறி நிற்கும் வகையில் அதை அமைப்பார்களாயின், அதன்வழியே கல்வி பெறுவார் நாட்டுக் கலைகளையும் பண்பாட்டினையும் வாழ வைப்ப தோடு தங்கள் வாழ்வையும் வளமுள்ளதாக்கிக் கொள்ள முடியும். எ டு த் து க் காட் டா க இ ந் த நாடகக் கலையினையே கொள்வோம். இத்துறையினைத் தமிழ் நாட்டு நாடக நெறிக்கு மாறுபடா வகையில் பாடத்திட்டத் தில் புகுத்தினால் அந் நாட்டுக் கல்வி யைப் பயில்வோர் பிற்காலத்தில் நாடகத் தமிழை வாழ வைப்பதோடு தங்கள் வாழ்வையும் வளமுள்ளதென ஆக்கிக் Qsrsirarfrff

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/41&oldid=684812" இலிருந்து மீள்விக்கப்பட்டது