பக்கம்:தாய்மை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தாய்மை

களன்றோ! இவ்வாறே பிறகலைகள் பற்றியும் கொள்ள வேண்டும்,

நாட்டுக் கல்வியில் கருத்திருத்தும் நல்லவர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டும். சிறப் பாகத் தமிழ்நாட்டுக் கல்விமுறையில் தமிழ்க் கலைக ளெல்லாம் இடம் பெறவேண்டும். கலைகளின் நுண்ணிய முறைகளும் அமைப்புக்களும் எல்லார்க்கும் புலனாகுமா என்று சொல்லலாம். ஆயினும் அவற்றின் பொதுத் தன்மைகளையும் இயல் புகளை யும். பயன்களையும் பொதுப்பட அனைவருக்கும் விளக்கும் பாடப் பகுதி யாக்கி, சிறப்பாகப் பயில விரும்புவோருக்கு அந்த நுண் பகுதிகளை விளக்கும் பாடப்பகுதிகளை அமைக்கலா மன்றோ! கோவலன் கண்ணகியின் கதையைப் பாட வந்த இளங்கோவடிகள், அவ்வரலாற்றுக்கிடையில் எத்தனைக் கலைகளை-அவற்றின் துண்மை பருமை விளக்கங்களோடு அமைத்துக் காட்டியுள்ளார்! அவற்றால் சிலம்பு சிறக் கின்றதன்றி, அதைப் பயில்வோர் குறைபட்டுக் கொள் வதில்லையே. அப்படியேதான் நாட்டுக் கல்வியின் அமைப்பும் பொருத்தமானதாக-நாட்டு நலத்துக்கு ஏற்ற தாக அமைய வேண்டும். இனி வரும் திருத்தங்களில் இத்தகைய கருத்துக்கள் இடம் பெறின் தக்க பயன் விளையும் என்பது உறுதி. இந்தச் சங்கீத நாடக சங்கத்தார் இந்த அடிப்படை உண்மையினைத் தமிழ் நாட்டுக் கல்வித் துறைக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் மாநில மத்திய அரசாங்கங்களுக்கும் உணர்த்துவார்களா யின் ஓரளவு பயன் விளையும் என நம்புகிறேன். வெறும் பேச்சளவில் அன்றிச் செ ய ல ள வி ல் அரசாங்கங்கள் செயலாற்ற வேண்டும். சங்கங்களையோ குழுக்களையோ அமைத்து விட்டுத் தங்கள் பணி முடிந்தது என எண்ணாமல், அக்குழுக்கள் செயலாற்றத்தக்க வகையில் எல்லா , ஏற்பாடுகளையும் செய்துவர வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/42&oldid=684814" இலிருந்து மீள்விக்கப்பட்டது