பக்கம்:தாய்மை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தாய்மை

உண்மையாக்கப் பெறுகின்றன. ஆம்! ஒரு காலத்தில் கோலோச்சிய அறிவியலும் அதன் வளர்ச்சியும் சமூக வாழ்வு கருதி அழிக்கப்பெற்றன. ஆனால் இன்று அவை தலை தூக்கி மறு வாழ்வு பெறத் தொடங்கி யுள்ளன. - - -

பாரதத்தில் கா ள ம ா மு னி வர் வருகிறார். துரியோதனன் ஏவலால் அவர் ஒரு பூதத்தை உண்டாக்கி, பஞ்சபாண்டவர்களை அழித்துவிட்டு வர அனுப்புகிறார். அப் பூதமோ பாண்டவர்கள் நச்சுப் பொய்கைக் கரையில் இறந்து கிடப்பதைக் கண்டு (தருமன் இறப்புக்குச் சமமாக மயங்கி விழுந்து கிடக்கிறான். பின் எழுந்து தரும் தேவதையின் கேள்விகளுக்கு விடை தந்து தன் தம்பியரை உயிருடன் பெறுகிறான்) திரும்பி வந்து, தன்னை ஏவிய காளமா முனிவரையே கொன்றுவிடுகிறது. ஆம் இன்றைய உலகம் அந்த வகையின் தான் முன்னேறி வருகிறது. தன்னை உண்டாக்கியவனையே, அணுகுண்டும் பிறவும் அழிக்கப்போகும் காலம் அண்மையில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முடிவுக்குள்ளேயே உலகம் உயிரற்ற பாலைவனமாகுமோ என்று அஞ்ச வேண்டி யுள்ளது. - -

நாட்டு மக்கள் இத்தகைய அழிவுக்குரியவற்றை ஏன் முயன்று செய்கின்றனர்? வேற்று நாட்டவரை நசுக்க - அழிக்க-அந்த நாடுகளை உயிரற்ற பொட்டல்களாக்க நினைக்கின்றனர். இந்த அவல நிலையினை எண்ணும் போது, சென்ற உலகப்போர்த் தொடக்கத்தில் இங்கிலாந்து ஜர்மனியின் மேல் போர் தொடுக்கத் தொடங்கியபோது, அந்த நாட்டிலேயே வாழ்ந்த பர்னாட்ஷா சொல்லியவை நினைவுக்கு வருகின்றது. - -

ஆங்கில நாட்டு மக்களே-உங்கள் அழிவுப் பாதை யால் ஜர்மன் நாடா அழியப்போகிறது-உலக நாடுகளில், ஒன்றல்லவா அழியப்போகிறது. ஜர்மன் நாகரிகமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/46&oldid=684819" இலிருந்து மீள்விக்கப்பட்டது