பக்கம்:தாய்மை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலின் அழிவும் தோற்றமும் 43

வரையில் இருக்குமா என்பதே ஐயத்துக்குரியது. நான் என் பயண நூலில் குறித்தபடி அமெரிக்க நாட்டில் ஒர் ஊரில் உள்ள அணு ஆயுதங்களே உலகத்தை அழிக்க போதுமானவை. அவை தாமாக என்று வெடிக்குமோ என்னாகுமோ என எண்ண வேண்டியுள்ளது. .

1918-இல் முடிந்த உலக மகாயுத்தம் இருபது ஆண்டுகள் கழித்து 1938.39 இல் மறுபடியும் தொடங்கிற்று. அணு குண்டினால் அது 1947 இல் முடிந்தது. நாற்பது ஆண்டுகள் கழித்தும் இன்னும் உலக மாகாயுத்தம் ஏன் தொடங்க வில்லை என்பதற்குக் காரணம் பலரும் அறிவர். பெரு நாடுகளிடத்தும் சிலசிறு நாடுகளிடத்தும் அணுகுண்டுகளும் அதனிலும் மிக்க வலிமையுள்ளவையும் இருக்கின்றன. ஆயினும் ஒருவர் உடைமை மற்றவருக்குத் தெரியாது. தெரிந்தது போலக் காட்டிக் கொண்டாலும் உண்மை புலப்படுவதில்லை. ஆகவே வல்லரசுகள் போர் தொடங்கிப் பிற நாடுகளின் மீது அங்கே சென்று அணு ஆயுதம் போன்றவற்றை உபயோகிக்க நினைத்தால், மற்றை நாடுகள் தத்தம் இடங்களிலிருந்து நெடுந் தொலைவு செல்லும் ஏவுகணைகளால் கைக்குண்டுகளை இட்டுத் தம்மையும் தம் நாட்டையும் அழிக்குமே என்ற அச்சத்தில் வாளா இருக்கின்றன. அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்ற திருவள்ளுவர் இவர்களைப் பற்றித்தான் அன்றே சொல்லியுள்ளார்.

மனிதன் அறிவியலில் எத்தனை முன்னேற்றம் காண் கிறானோ அத்தனை அளவிற்கு அவன் மனிதப் பண்பை இழக்கிறான். தமிழ்நாட்டிலும் பிற பழம்பெரு நாடு களிலும் இன்றைய ஆயுதங்களைவிடக் கொடிய ஆயுதங் களும் அறிவியல வளர்ச்சியும் இருந்தன என்பதற்குச் சான்றுகள் ஏராளம், அவையாவும் பொய், புனை கதை, புராணம் என்று சொல்லிய காலமெல்லாம் மெல்ல மெல்ல மலையேறி, அவை ஒவ்வொன்றும் இன்றைய அறிவியலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/45&oldid=684818" இலிருந்து மீள்விக்கப்பட்டது