பக்கம்:தாய்மை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று (18.3.89) மாலை 3.30 மணிக்கு, சென்னை வானொயில் நாடகம் கேட்க நினைத்து, அதை இயக் கினேன். திருச்சி நிலையத்தே பதிலாகி, சென்னை நிலைய வழியிலும் ஒலி பரப்பப் பெற்ற அந்த நாடகம் எதிர்கால உலகினைச் சித்திரிப்பதாக இருந்தது. எங்கோ நெடுந் தொலைவில் - இதுவரையில் கண்டும் கேட்டும் அறியாத ஒரு கோளிலிருந்து - உலகத்திலிருந்து எல்லா வகையிலும் பல்வேறு நுண் அணுக்களால் பொருத்தி உருவாக்கப் பெற்ற ஓர் இயந்திர மனிதன், இந்நாட்டு மனிதன்தமிழன்-இளஞ்செழியனோடு பேசி, இங்கே வந்து நாட்டு நடப்பைக் காண்கின்றான். அவனை உண்மை மனிதனாக மதித்து, இளஞ்செழியன் தங்கை காதலிக்கிறாள். இங்கேயும். அத்தகைய ஆய்வு முற்றுப் பெறும் நிலையில் உருவாகியும் செம்மையாக நிறைவு பெறவில்லை. அவன் வந்த வழியே சொந்தக் கிரகத்துக்குத் திரும்புகிறான். இதுவே நாடகம். இதுபோன்று இரண்டு மாதங்களுக்கு முன் மற்றொரு நாடகமும் வானொலியில் ஒலிபரப்பப் பெற்றது. இவை அ ைன த் து ம் இருபத்தோறாம் நூற்றாண்டிலோ - பிறகோ நடைபெறும் என்று கனவு கண்டு, இத்தகைய நாடகங்கள் எழுதப்பெறுகின்றன. அணுவியலின் வளர்ச்சி, முதிர்ச்சி, பிற அறிவியல் வளர்ச்சி. செறிவு ஆகியவை மனிதனை இந்த நிலைக்கு ஒரு வேளை இழுத்துச் சென்று அவன் கனவை நனவாக்கவும் கூடும். ஆயினும் அந்த நாளை எண்ணின் நல்ல மனத்தில் நடுக்கமே உண்டாகிறது - உலகு அந்த அதிசயத்தை காணும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/44&oldid=892727" இலிருந்து மீள்விக்கப்பட்டது