பக்கம்:தாய்மை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தாய்மை

யும். காட்டி அல்லற்றை அழிக்க முன் நிற்பதைக் காண் கிறோம். ஆனால் இன்று மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சக்திகள்-கொடும் ஆயுதங்கள், எல்லாரையும்-எல்லா வற்றையும்--ஏன்? - ஏ. வி ய வ ைன யு ம் கூட அ. N க் க. அல்லவா பயன் படுகின்றது. இந்த உண்மைகளை அழிவுக் குண்டுகளை உடைய ஆதிக்க நாடுகள் உணருமா? உணர்ந்து செயல்படுமா? - .

பழங்காலத்தில் அறிவியல் மிக்கு ஓங்கி இருந்தது. வலவன் ஏவா வான ஊர்தி என்று புறம் குறிக்கிறது. இராவணன் . பின் இராமன் வான் வழியே பறந்துவந்தனர் என அறிகிறோம். அனுமான் போன்றாருக்குத்த் தனியாகச் செல்லும் தனிச் சிறு விமானங்களும் இருந்திருக்க வேண்டும். ஆனல் இவற்றையெல்லாம் எள்ளி நகையாடியவர்கள் நம் நாட்டிலேயே இருந்தனர். இன்று அந்த விமானங் களுக்கு மேலாக விண்ணில் செல்லும் ஊர்திகளைக் கண்டு வாய் மூடினர். அப்படியே எங்கோ துவாரகையில் இருந்த கண்ணன் எங்கோ இந்திரப் பிரஸ்தத்திலோ.காட்டிலோ இருந்த தருமன் நினைக்க, உடனே ருக்குமணியை விட்டு ஒடி வந்தான் என்பதை என்னி நகையாடிய காலம் இருந்தது. இன்று-நான் மேலே முதலில் குறித்த வானொலி நாட்கம் அந்த ஆற்றலைப் பெற-எங்கே நினைத்தாலும் நெடுந் தொலைவில் உள்ளார் உற்றுணரும் நிலை காணமுயல்வதைச் சுட்டிற்று. இன்னும் சில நாட்களில்-ஆண்டு களில் அதுவும் உண்மையாகலாம். ஆகவே நம்நாட்டுப் புராண இதிகாசங்கள் கூறியவை அக்கால அறிவியல் வளர்ச்சியைக் காட்டுகின்றனவன்றோ! இவற்றை வெறும் கற்பனை என்று கூற நினைத்தாலும், அக் கற்பனை இன்று உண்மையாக உள்ள நிலையினையைப் எண்ணிப் போற்ற வேண்டாமா?

இராவணன், இரணியன் போன்றோர் ஆட்சிகளிலே இயற்கையே அவர்தம் கட்டுக்கு அடங்கிய நிலையினைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/48&oldid=684823" இலிருந்து மீள்விக்கப்பட்டது