பக்கம்:தாய்மை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலின் அழிவும் தோற்றமும் 47

காண்கிறோம். இன்று வெப்பம் குளிர்கிறது. குளிர் சுடு: கிறது. காற்று மின் தருகிறது. புயல் மின் தருகிறது. இவையெல்லாம் மனித ஆற்றல்தாம் என்றாலும், அந்த ஆற்றல் முன்னோருக்கு இருக்க இடமில்லை என்று சொல்ல முடியுமா? -

இரணியன் வரலாற்றிலே ‘அணு’ வருகிறது. அணுவைப் பிள்க்க முடியாது என்று அறிவியல் அறிஞர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் எண்ணியிருந்தனர். அவர்கள் ஆய்வில் அது புலப்படவில்லை. ஆனால் கம்பர் பிரகலாதன் வாக்கில் அணுவை நூறுநூறாக-பலவாகப் பிளக்கிறார். அந்த மிகமிகச் சிறியதான துகளுக்கு கோண்’ என்றும் பெயர் தருகிறார். அணுவைச் சத கூறிட்ட கோணிலும் உளன் என்பது கம்பர் வாக்கு கடவுளைப் பற்றி எழுந்த ஒன்று. சதம் என்பது நூறு என்ற அளவில் அமைவதன்று. அன்று நூறு பேரெண்ணாக-பின் கோடியும், ஆம்பலும், சங்கநிதி, பதுமநிதி போன்ற எல்லைகாண முடி யா த பேரெண்களும் இருந்தன. எனினும் பலருக்கும் அறிமுகமான நூறு’ என்ற தமிழ்ச் சொல்லை-பல எனும் பொருள்படக் குறித்து, அணுவைப் பலபலவாகப் பிளக்கலாம் எனக் காட்டி நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறார் அ ன் றோ! அப்படியே குறளின் பெருமையைக் கூறவந்த போது அணுவைத் துளைத்து எழு கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள் என்றனர். ஆம்! அணுவைத்துளை செய்து எழு கடலைப் புகட்டி நலம் செய்தனர். இன்று இத்தாலியன் பிரித்த அணுவினால் எழுகடலும் கொந்தளிக்கும்-அழியும் அவலம் உண்டாகிறது. அமெரிக்கர் ஜப்பானில் அணுகுண்டு இட்டு வெற்றி கொண்டாலும், அந்த அணுவைப் பிரித்து ஆயுதமாக்கித் தந்தவன் சிகாகோவில் வாழ்ந்த இத் தாலியனே என்பது பலருக்கும் தெரியாது. நான் என் ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் என்ற நூலில் (பக் 300-302):

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/49&oldid=684825" இலிருந்து மீள்விக்கப்பட்டது