பக்கம்:தாய்மை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–48 - தாய்மை

நன்கு இது பற்றி எழுதியுள்ளேன். ஆகவே அணுவைத் துளைத்தும் பிரித்தும் கூறு படுத்தியும் பயன்படுத்தினர் பழங்கால மக்கள் என்பது தெளிவு.

நாம் அறிந்த இராமாயணம், பாரத யுத்தங்களில் உப யோகித்த அஸ்திரங் களைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றது. நான் முன்னரே குறித்தபடி, எத் தனையோ பெயர்களில் பொருள் விளங்கா வகையில்.பலப் பல இருந்தன. அவை அனைத்தும்கூட இன்று இல்லை என லாம். ஒன்று நூறாக, நூறு ஆயிரமாக, ஆயிரம் லட்சமாகப் பிரிந்துசெயலாற்றும் நிலை அங்கே காணப் பெறுவது. ஒரே அம்பை விட்டு, ஒரு மரத்தின் எல்லா இலைகளிலும் துளை உண்டாக்குமாறு அருச்சுனன் செய்தான் என்பது பாரதம். வேலும் அம்பும் விளைத்த வினோத விளைவுகள் எண்ணிறந்தன. ஆயினும் அவை யாவும் இடைக்காலத்தில் இல்லாதொழிந்தன. காரணம் மக்கள் ஆக்க நெறிக்குப் பயன்படத்தக்க வகையில் வளர்ந்த அறிவியல், அழிவுப் பாதைக்கு வழி வகுத்ததேயாம். விண்ணில் விரைந்து செல்லப் பயன்பட்ட விமானம், விண்ணிலிருந்து குண்டு வீசி நாட்டையும் நகரையும் அழிக்கப் பயன்படுத்தப்பட்ட தன்றோ! அவ்வாறே பண்டைக் காலத்தில் வளர்ந்த அறிவியல் பல கொடிய மன்னர்களால்-ஆட்சியாளர்களால் அழிவுக்குப் பயன்படுத்தப்பெற்றது. எனவே நல்லறிஞர் பலர் அவை வாழ்வதிலும் வீழ்வதேமேல் எனக் கருதினர்.

பண்டைய அறிவியல் வெறும் போர்க்கருவிகளும் பிறவும் செய்யப் பயன்பட்ட ஒன்றன்று. கருவில் வளரும் குழந்தைக்குத் திங்கள்தொறும் உண்டாம் வளர்ச்சியையும் அண்டமுகடுக்கு அப்பாற்பட்ட விரிந்த விண்வெளித் தன்மையினையும் கூட அன்றைய அறிவியலார் கண்டுள்ளனர். குழந்தை கருவுற்ற ஐந்தாம் நாளிலே அக் கரு ஆணா பெண்ணா என அறிந்து கூறினார். ஆனால் இன்றைய நாகரிகம் போன்று, பெண் கருவை அழிப்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/50&oldid=684828" இலிருந்து மீள்விக்கப்பட்டது