பக்கம்:தாய்மை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலின் அழிவும் தோற்றமும் 49.

அந்த ஆய்வைப் பயன்படுத்தவில்லை. அப்படியே விண்வெளி ஆராய்ச்சியில் விரிந்த அண்ட கோளத்தில் நம் உலகின் சிறுமை என்பதையும் பரந்த கால வெள்ளத்தில் இவ்வுலக வாழ்நாள் நொடி என்பதையும் விளக்கி மனிதனைச் செருக்கற்று வாழவழி வகுத்தனர். என்றாலும் அக்கால வெள்ளத்துக் கிடையில் உண்டான மாறுபாடு களால் அந்த அறிவியல் வளர்ச்சி ஆக்கத்துக்குப் பயன் பட்டதைவிட அழிவுக்கே அதிகமாகப் பயன்பட்டது. எனவே அவற்றை நீக்க-முற்றும் அழிக்க-வையம் வாழ: விரும்பிய நல்லறிஞர்கள் - சான்றாண்மை மிக்கவர் கருதினர். அவர்கள் வழி ஓரளவு அறிவுடையோனாறு. அரசும் செல்லும் என்றபடி, அரசுகள் செயல்பட்டன. உலகமே ஒன்று கூடி அத்தகைய அழிவுக் கருவிகளும் அவற்றின் துணைகளும் சாதனங்களும் உலகுக்குத் தேவை அற்றவை என முடிவு கண்டனர். அவற்றை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். சென்ற உலகப் போரின் பின் - அணுவால் அழிவு கண்ட பின் நம் நாட்டு மூதறிஞர் ராஜாஜி போன்றவர்களும் அழிவுக் கருவி களையும் ஆயுதங்களையும் அவற்றிற்கு வழி காட்டும் அறிவியலையும் அழித்து- கடலிலிட்டுப்பொசுக்க வேண்டும் என்று கூறவில்லையா! ஆம்! அந்த அறநெறியிலே அன்று வாழ்ந்த நல்லவர்டபண்பாளர் சான்றோர் தீமை தீயட்டும்” என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி யிருப்பர். விண்ணையும் மண்ணையும் அளந்த - கருவினையும் விரிந்த அண்ட கோளத்தையும் கணக்கிட்ட, உடன் அழிவுக்கும் வழி காட்டிய அந்த அறிவியல்விஞ்ஞானம் உலகை விட்டே விலக - அழிய-கெட வழி வகுத்தனர். ஆம்! ஊழிகளைக் கணக்கிட்டு உணர்த்திய அறிவியல் அப்பாலுக்கப்பலாய பொருள்களைக் கண்ட அறிவியல் அணுவுக்கணுவாய் அமைந்த பொருள்களைப் பகுத்துக் கண்ட அறிவியல்-புகை யெட்டும் போக்கெட்டும் புலனகளெட்டும் பிற அனைத்தையும் கண்ட அறிவியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/51&oldid=684830" இலிருந்து மீள்விக்கப்பட்டது