பக்கம்:தாய்மை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 - தாய்மை

நல்லவர் தம் கண்டிப்பான செயலால் அழிக்கப்பெற்றது. அவை ஆக்கப் பணிக்கு உதவும் நிலையினின்று மாறி அழிவுப் பாதைக்கு வழி வகுத்த காலத்தில், அதன் அழிவுப் பாதையைத் தேடிக்கொண்டு, உலகை விட்டே அகன்றது. ஆனால் இன்றோ!

இடைக்கால மனித சமுதாயம் அந்த நல்லவர் தம் செய்கையால் அமைதியாக - பேராசையும் ஆணவமும் இன்றி-மண்ணாசை மிகாவகையில் செம்மை வாழ்வில் சிறக்க வாழ்ந்தது. காலமாறிற்று, மறுபடியும் ஆக்கப் பணிக்கு வழி வகுக்க வேண்டிய அறிவியல் அழிவுப் பாதைக்கு வழி கோலத் தொடங்கிவிட்டது. இன்று மறுபடியும் அவையாவும் அழியுமா? ஒழியுமா என மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர். மூதறிஞர் இராஜாஜி அவர்கள் அணு ஆயுதங்கள் அனைத்தையும் கடலில் இட்டு இழக்க வேண்டும் என்றும் மேலும் அத்திகைய அழிவுக்குப் பயன்படும் க ரு வி க ைள ச் செய்யலாகாது என்றும் அதற்குகெனச் சமாதான வழியினை வல்லரசுகள் வகுத்துக்கொண்டு செயல் புரிய வேண்டுமென்றும் வற்புறுத்திக் கூறினார். ஆனால் நேர்மாறாக - அவர் சொல்லுக்கு மதிப்புத் தராது பல நாடுகள் இன்று அணு குண்டு போன்ற ஆக்க வேலைக்கு மாறான-அழிவுக்கு என அமைந்தவற்றைப் பெருக்குகின்றன. மனித சமுதாயமும் மற்றைய உயிரினங்களும் ஒன்றிய உணர்வில்-சமுதாய நெறியில்-பிணைந்து வாழ வேண்டிய நிலை மாறி இந்தப் பொல்லாத அழிவுச் சாதனங்களைப் பெருக்கி வாழ நினைக்கின்றன. இந்த எண்ணம் வளர வளர-பலநாடுகள் பல அழிவுச் சாதனங்களைப் பெருக்கப் ப்ெருக்க உலகில்

அமைதி நிலவுவ தெங்கே? -

உலக நலம் கருதி-உயிரின வாழ்வை எண்ணி வளம் பெருக்கி வாழ வேண்டிய வையம்-வையத்து நாடுகள் இவ்வாறு மறுபடியும் அழிவுப் பாதையை நோக்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/52&oldid=684832" இலிருந்து மீள்விக்கப்பட்டது