பக்கம்:தாய்மை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலின் அழிவும் தோன்றமும் 5

செல்கின்றன. சிலப்பதிகாரம், தேவாசுர யு த் த ம் பதினெட்டு ஆண்டுகளிலும், இராம இராவண யுத்தம் பதினெட்டு மாதங்களிலும், பாரதயுத்தம் பதினெட்டு நாட் களிலும், செங்குட்டுவன் கனக விசயர் யுத்தம் பதினெட்டு நாழிகைகளிலும் நடந்துமுடிந்தன எனக்காட்டும். இன்றைய இந்த உலகில் அத்தகைய ஒரு போர் மூளுமானால் பதினெட்டு நொடிகளில் உலகம் சாம்பலாகும் வகையில் அழிவுக் கருவிகள் பெருக்கப் பெறுகின்றன. வல்லரசுகள் நல்லன எண்ணி ஒன்றுகூடி இவை அனைத்தையும் மீண்டும் அழித்தால் உலகம் உய்யும்-உயிர்கள் வாழும். இன்று இதை வலியுறுத்தி வேண்டுபவர் இல்லைதான். அதனால் நாடுகள் நம் மனம் போன வழி போகலாமா? வல்லரசு நாடுகளும் பிறவும் இந்த உலகத்தையும் உயிர்களையும் எண்ணி, அவற்றை அமைதியில் வாழ வழிகோலி தீயவை அனைத்தையும் தீயாக்கி நலம் புரிய வேண்டுமெனக் கேட்டு அமைகின்றேன். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/53&oldid=684833" இலிருந்து மீள்விக்கப்பட்டது