பக்கம்:தாய்மை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சமயம்

4. திருக்கோத் தும்பி

உலகம், உயிர், கடவுள் என்ற முப்பொருளும் என்றும் உள்ளனவாய தன்மையில் சிறப்பதை அறிவோம். இவற்றுள் அப்பாலுக்கப்பாலாய கடவுள்-இயவுள் எனவும் தெய்வம் எனவும் போற்றப் பெற்று என்றும் யாண்டும் யாதொரு மாற்றமுமின்றிச் சிறக்க, மற்றைய இரண்டும் நிலைபேறுடையன வாயினும் குறித்த எல்லையில் நின்று பல்வேறு மாறுபாடுகளுக்கு உள்ளாகி நிலையாது உழன்றுகொண்டே அவன் ஆட்ட ஆடும் தன்மையுடையன. இவற்றுள்ளும் உயிராகிய ஆன்ம. இறையுணர்வு பெற்று உலகமாகிய பாசத் தொடர்பு அற்ற நிலையில் இறைவனோடு இன்புற்றுத் திளைக்கும் பிறவாப் பெருநெறியை எய்த இயலும். பாசமாகிய பற்றற்று, பசுவாகிய நல்லுயிர் பதியாகிய இறைவனை அடைய வழி காட்டுவதே சமயமாகும். அத்தகைய சமயங்களுள் இந்த உண்மையை நன்கு உலகுக்கு விளக்கி, உயிர்களை ஆற்றுப் படுததும் பழஞ் சமயமாகிய சைவமே சிறந்த வழி காட்டியாக உள்ளது என்பதை உலகமே உணரும். அந்த உயரிய மெய்ந் நெறியை விளக்குவனவே சைவ சமயத் தோத்திரங்கள். தோத்திரப் பாக்களுள் தம்மை மறந்து பாட வைக்கும் திருவாசகம் பிற அனைத்திலும் சிறந்த தாகும். எல்லாராலும் எளிதில் எட்ட முடியாத இறை நிலையை எட்டிப்பிடிக்கும் உண்மையை உணர்த்துவதால் எட்டாம் திருமுறையாக இது அமைகின்றது. இ த ன் ஈர்ப்புச் சக்தி மிக்க வலிவுடையது. வேற்றுச் சமயத்த வராகிய-தம் சமயம் பரப்ப இங்கு வந்த போப்’ அவர் களையே இவ் வாசகம் பற்றி சர்க்க, அவர் திருவாசகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/54&oldid=684835" இலிருந்து மீள்விக்கப்பட்டது