பக்கம்:தாய்மை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 53

தம்மைப் பறிகொடுத்து, அதைப் பயின்றதோடு அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர் த் தா ர் என்பதனை நாமறிவோம்-நாடறியும். திருவாசகம் இங்கு ஒரு கால் ஒதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்’ என்பதும் கேட்ட பொழுதே பறவைகளும் விலங்குகளும் கூட மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்பதும் வியப்பான செய்தி களல்ல. ஆம்! அம்மணி மொழியினை யாத்தவர் வழுவிலா மணிவாசகராவர்; இறைவனால் தானே வந்து ஆட் கொள்ளப்பெற்றவர். இவர் மனிதரை மட்டுமன்றிக் கிளியினை, குயிலினை, தும்பியினை, விளித்துப் பாடிய பாடல்களின் வழியே உயிரினத்தின் ஒருமையினை உணர்த்தி, அனைத்தும் இறை நிலை பெறும் வழியினைச் சுட்டிச் சென்றுள்ளார். அவற்றுள் தும்பியை விளித்துப் பாடும் பகுதியே கோத்தும் பி. திருக் கோத்தும்பி’ என அரசவண்டாக அழைப்பது ஏன்? இவர் அமைச்சராக இருந்தமையால் தம்மை ஒத்த வகையில் அரசு நிலை அமைச்சு நிலையில் உள்ள தும்பியை அழைத்தாரோ எனக் கேட்கலாம். ஆனால் மணிவாசகர் உள்ளம் எல்லா உயிர் களையும் ஒத்து நோக்குவது-அரச வாழ்வை விட்டு ஆண்டி வாழ்வை விரும்பி மேற்கொண்டது. எனவே அவர் அவ்வாறு செய்யார்! யாரையாவது அழைத்து, அவர் களுக்கு ஒரு பணியினை இட்டால்-அதுவும் அவர்கள் இது வரை செய்து வந்ததை விட்டுப் புதிய வகையில் பணி செயச் சொன்னால் த்டுமாறுவர் - ஏன் மறுக்கவும் செய்வர். அவர்களை அன்புடனோ, புகழ் மொழிகளாலோ அழைத்தால் விரும்பிச் செய்வர். டேய் பையா இங்கே வா! இதைச் செய்” என்றால் பையன் திரும்பிப் பார்க்காமலே சென்றுவிடுவான். ஆனால் தம்பி! நீ ராஜா அல்ல! கண்ணல்ல! இதைச் செய்! என்றால் கட்டாயம் நம் வேலை நடைபெறும். இந்த வகையிலே தான் எதை எதையோ தேடி, தினைத்துணைத்தேன் தேடும் தும்பியினை என் ராஜா தும்பி! பொன் வண்டே!

4 . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/55&oldid=684837" இலிருந்து மீள்விக்கப்பட்டது