பக்கம்:தாய்மை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 57.

பொருட்டுத் தானே பலிதேர்வான்’ என்பதையும் ஒரு சேர இதில்விளக்கி, அடியவருக்கு எளியனான-அல்லார்க்கு அல்லனான தன்மையினை இதன்வழி மணிவாசகர் விளக்குகின்றாரன்றோ! - .

இவற்றைக் கேட்ட தும்பிக்கு, தன் உணவைப் பற்றிச் சொல்லாது தன்னை வலிய அழைத்து எதை எதையோ சொல்லுகின்றாரே என்ற எண்ணம் தோன்றியிருக்கும். அதை முகத்தில் கண்ட அடிகளார், இறைவன் எத்தகைய தேனானவன் என்பதையும் வண்டு நாள்தோறும் உண்ணும் தேனினும் எவ்வாறு உயர்ந்த தேன் இது என்பதையும் வெளிப்படையாகச் சொல்லி, அத்தேனை உண்ணுமாறு அழைக்கிறார்.

கினைத்தொறும் காண்தொறும் பேசுக்தொறும் .

. . . எப்பொழுதும் அனைத் தெலும்பு உள்நெக ஆனந்தத்தேன்சொரியும்

. குனிப்புடையான்’ என்று அந்த அனுபவத்தேனை அவர் குறிக்கின்றார். -

அத்தேன் ஒருவருக்குச் சொந்தமன்று. எல்லா உயிர் களும் அதை எடுத்து-ஊதி உண்ணலாம். அது பொதுச் சொத்து என்பதையே அம்பலத்தை உள்ளிட்ட நடம் காட்டும் குனிப்பு’ என்ற சொல்லால் குறிக்கின்றார். மேலே கண்ட முதல் இரண்டு அடிகளில் இறைவனாகிய ஆனந்தத் தேனைப்பற்றிவிளக்கி, அத்தேனை உண்ணுமாறு ‘தினைத்துணை உள்ள பூவினிலே தேன் உண்ணும்’ தும்பியை ஆற்றுப்படுத்தினார். அத்தும்பி உடனே அதைப் பற்றிப் பயன் பெற்றிருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ! | -

மறுபடியும் இறைநிலையினையும் தன் நிலையினையும் எண்ணுகிறது அவர் உள்ளம். குருந்த மரத்தடியில் இருந்து குதிரை வாங்கச் சென்ற தன்னை வலிய வந்து ஆட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/59&oldid=684844" இலிருந்து மீள்விக்கப்பட்டது