பக்கம்:தாய்மை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - - - முன்னுரை

என்றோ எழுதிய என் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடவேண்டும் என என் மாணவர் சிலர் விரும்பிய வழி முன் எழுதிய ஐம்பது கட்டுரைகளைத் தெரிந்தெடுத்து இருநூல்களாக வெளியிட முயன்றேன். அப்படியே இருபத் தைந்து சிறு கட்டுரைகளை ஒங்குக உலகம் என்ற தலைப்பில் இவ்வாண்டு ஏப்பிரலில் வெளியிட்டேன். பெரிதாக உள்ள கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட முயன்றேன். அத் தொகுப்பு அளவில் பெரியதாக அமையும் நிலையில், இருநூல்களாக சுமார் 180 பக்க அளவில் வெளியிட நினைத்து ஒன்பது கட்டுரைகளைத் தமிழர் வாழ்வு’ என்ற தலைப்பில் சென்ற ஏப்பிரலில் வெளியிட்டேன். மிகுதி உள்ளவற்றில் பதினொரு கட்டுரைகளை இன்று இந்தத் தாய்மை’ என்ற நூலாக வெளியிடுகின்றேன். -

இதில் உள்ள ‘தாய்மை என்ற முதல் கட்டுரையின் பெயராலேயே இந்நூல் அமைகின்றது. ‘தாய்மை"யின் சிறப்பு, செம்மை, தூய்மை பற்றியெல்லாம் விளக்கியுள்ளேன். பிற கட்டுரைகளிலும் அந்த வகையிலே பொருள் விளக்கம் பெறுகின்றது. இன்னும் இத்தகைய நூல்கள் மூன்று அல்லது நான்கு வரும் அளவில் பல கட்டுரைகள் (வானொலிக் கட்டுரைகளுடன்) உள்ளன. வாய்ப்பும் நேரமும் கிடைப்பின் அவற்றையும் தொகுத்து வெளியிட எண்ணியுள்ளேன்.

இதில் பல்வேறு பொருள்களில் பல்வேறு வகைகளில்பல ஆய்வு நெறிகளில் கட்டுரைகள்அமைந்துள்ளன.பயில்வார் அவற்றை ஏற்றுக் கொள்வர் என எண்ணுகிறேன். என் உள்ளத்து எழுந்த தமிழ் காட்டும் பல நல்ல கருத்துக்களையே இங்கே தொகுத்துக் காட்டியுள்ளேன்.

இந்நூல் வெளிவருங்கால் ஒப்புநோக்கி அச்சுப்பிழை களைத் திருத்தி உதவிய பச்சையப்பர் கல்லூரித் தமிழ்ப் போராசிரியர் திரு. டாக்டர் இரா.மாயாண்டி அவர்களுக்கு என் நன்றி உரித்து. - 9 * *

அனபுடன, தமிழ்க்கலைஇல்லம் }

சென்னை.30.15.6.90. அ.மு. பரமசிவானந்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/6&oldid=684846" இலிருந்து மீள்விக்கப்பட்டது