பக்கம்:தாய்மை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சமுதாயம்

1. தாய்மை

உலகில் தாய்மையே அனைத்தினும் உயர்ந்ததாகப் பேசப்பெறுகின்றது. அத் தாய்மை இன்றேல் தரணி ஏது? எவ்வுயிராயினும் தாய்மை அடிப்படையிலேயே உலகில் தோன்றி வளர்தல் வேண்டும். இன்று அறிவியல் வளர்ச்சி யால் தாயற்ற சேய்கள் தோன்றுவதைக் காண்கின்றோ மாயினும், அத்தோற்றத்திலும் தாய்மை உள்ளமின்றேனும் தாய்மையின் உடல் நிலைக்குற்ற தட்ப வெட்ப அமைதியும் பிற இயல்புகளும் தேவையாகவே உள்ளன. எனவே அறிவியல் தாய்மை அங்கே அமைகின்றது. என்றாலும் அத்துடன் மன உணர்வு பெறும் தாய்மை யிடத்தில் காணப்பெறும் அன்பும் அரவணைப்பும் பிற வற்றிடம் பெற வாய்ப்பு ஏது? மேலும் இந்த அறிவியல் ஆக்கத்தின் நலக்கேடுகளை வருங்காலந்தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி, உடன் நாம் ஒன்றும் கூற இயலாது.

இத் தாய்மைக்கு இடனாயமைந்த பெண்மை போற்றத் தக்கது. தாய்’ என்ற சொல்லுக்குப் பல வகையில் போருள்கள் உள்ளன. முதலிடம் என்பதே அதன் முக்கியப் பொருளாகும். ஆம்! உலகத்துயிர்கள் தோற்று தற்கே. முதலிடமாக அமைகின்ற ஒன்றல்லவா? தாய்க் காணி, தாய்க்கால், தாய்க்கிராமம், தாய்க்கிழங்கு என்ற தொடர்கள் அம்முதலிடத்தை உணர்த்துவனவல்லவோ!’ எனவே தாய்மை உலகில் முதலிடம் பெறுகின்றது. இதன் அடிப்படையில் தாய் என்னும் சொல்லை நிலைக் கள்ன்ர்கக் கொண்டு பிறந்த ஒருசில சொற்களும் உயரிய பொருள்களிலேயே வழங்கப் பெறுகின்றன! தாயகம்” என்ற சொல்லுக்கு அடைக்கலம் என்ற பொருள் உண்டே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/7&oldid=684865" இலிருந்து மீள்விக்கப்பட்டது