பக்கம்:தாய்மை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தாய்மை

கல்வி உலகில் மலராதா என்ற ஏக்கத்தாலேயே அடிகளார் அவலக்கல்வியை - பாரதி கூறிய அருவறுப்பான கல்வியை ஒதுக்க வேண்டுகிறார். அதையும் அதைச் சார்ந்த பிறவற்றையும் பிறப்பிறப்பினையும் சித்தவிகாரம்’ எனச் சாடி, விகாரத்தைத் தெளிவித்துத் தன்னை ஆட்கொண்ட அண்ணலிடம் செல்லுமாறு வண்டினை ஆற்றுப்படுத்து கின்றார் அடிகளார். . - . - ஏழாவது பாட்டிலே தான் இறைவனை இடையறாது நினைத்துப் போற்றும் தன்மையினைக் கூறுகிறார். மறந்து நினைப்பதே இல்லை. நினைக்க மறப்பேனோ? எனக் கேட்டு, இடையறாது நினைத்த்லை உணர்த்துகிறார். உள்ளினேன் என்றேன் மற்றென்மறந்திர் என்றழுதாள்’ என்ற வள்ளுவர் காட்டிய தலைவியின் நிலையில் தன்னை வைத்துப் பாடுகிறார் அடிகளார். கெட்டேன் மறப் பேனோ? என்ற வினாவெழுப்பி, கெடுமாறு நினையா தொழிவேனோ என்று கூறியும், சட்டோ நினைக்க மறப்பேனோ என்று வள்ளுவர் வாக்கின்படி, நினைக்க வேண்டி மறக்க வேண்டா என உயர்த்தியும் இடையறாது இறைவனைத்தான் நினைக்கும் திறத்தினை உணர்த்து கிறார் அடிகளார். : - ~.

ஐந்தாம் ஆறாம் பாடல்களிலே பிறதேவர் வழி பாட்டினையும் சுற்றத்தினையும் மறந்து நிற்கக் காட்டிய அடிகளார் அடுத்த பாடலில் (8) சற்றே நின்று நினைத்துச் சமரச உணர்வில் திளைத்துப் பேசுகின்றார். புத்தசமயத்த வரைவாதில் வென்றதெல்லாம் அவர் தம் தருக்கழித்த நிலையைக் காட்டுவதேயன்றிச் சமயக் காழ்ப்பைக்காட்டுவ தன்று, தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறையென்ற சமரச ஞானம் கண்ட மணிவாசகர் பிறரைப் பழிப்பாரோ! அரி அயன் பற்றிய குறிப்புகளையும் அவ்வாறு ஒத்து நேர்க்கும் நிலையில் எண்ண வேண்டும். எனவே இறை நிலையினை ஒன்றாய் முளைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/62&oldid=684851" இலிருந்து மீள்விக்கப்பட்டது