பக்கம்:தாய்மை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 61

எத்தனையோ கவடுவிட்டு எனக் காட்டுகின்றார். பின் மேலே அவர் அவ்வாறு கூறுவானேன் என்ற வினா எழும். ஆம் மதம் மதம் என்று மதம் பிடித்துத் தம்முடையதே உயர்ந்தது என்றும் மற்றவை தாழ்ந்தனவென்றும் தருக்கும் மதவாதிகளைத்தான் மேலே சாடினார். உடன் பிறர் தவறாக எண்ணக்கூடாதே என்ற காரணத்தினால்தான் இங்கே இந்தச் சமரச ஞானத்தைப் போதிக்கிறார். மேலும் நிதி, பெண்டிர், மக்கள் இவர்களைச் சித்தவிகாரம் எனக் சுட்டியவர், தாய் தந்தையரை நினைக்கின்றார்; அவர்கள் இன்றித் தாமே இல்லையன்றோ! மனைவியோ பிள்ளைகளோ இல்லாமல் உலகில் வாழலாம். ஆனால் பெற்றவர் இன்றிப் பிறவியேது? ஆம்! ஆனால் அப்

பெற்றவர் P அவரைப் பெற்றவர் uurtff ? இவ்வாறெல்லாம் எண்ணிய அடிகளார் உள்ளம் இறுதியில், -

என்றாதை தாதைக்கும் எம்மனைக்கும் தம் பெருமான் குன்றாத செல்வர் -

என்று இறைவனைக் குறித்து அத்தகைய குறையாத செல்வமாம் தேனை உ ண் ணு மாறு வண்டினை ஆற்றுப்படுத்துகிறார். - -

அடுத்த நான்கு பாடல்களிலே இறைவன் கருணைக் கடலாகவும் தாயாகவும் நின்று தன்னை எவ்வாறு காத்தளித்தான் என்பதையும் அவ்வாறு காக்கப்பெற்ற தன் தாழ்ந்த நிலையினையும் காட்டி, அதன் விளக்கத்தில் * யாவர்க்கும் மேலாம் அவன் யாவர்க்கும் கீழாம்” தன்னையும் ஆட்கொண்ட வகையில் உலகில் எல்லா உயிர் களையும் காப்பாற்றுவான் என்று சுட்டித் தும்பியை அந்த அருள் நிலை பெற ஆற்றுப்படுத்துகின்றார். மேலும் அவன் அருள் பெற்றமையால் தன்நிலை எவ்வாறு உயர்ந்த தென்பதையும எண்ணிப் பார்க்கிறார், உ ய ர் ந் த அரச போக வாழ்வையும் அமைச்சர் பதவியையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/63&oldid=684853" இலிருந்து மீள்விக்கப்பட்டது