பக்கம்:தாய்மை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தாய்மை

‘து'வென்று தள்ளித் தூய உள்ளத்தோடு இறைவனை வழி பட்டு, அவன் அருட்செல்வ வெள்ளத்தில் தன்னை மறப்பதையே பேரின்ப வாழ்வாகக் கருதும் மணிவாசகர் இவற்றின் வழி உலகில் வாழும் மக்கள் உய்யும் நெறியினை நன்கு விளக்குகின்றார். உயிர்கள் புறத்தே காணக்கூடிய பொய் வாழ்வில் உள்ள மரணம், பிறப்பு’ என்ற இரண்டின் வழிப்பட்டு மாறிமாறி உழல்வதையும், நோயுற்று மூத்து, மெலிந்து வறிதே கழிந்தொழிவதையும், வன்னெஞ்சக் கள்வனாய் வன்மனத்தவனாய் இரக்கமின்றி வாழ்வதையும் காட்டி உள்ளத்தே பிழைபடும் பல் கொடுமைகளையும் சுட்டி, இத்தகைய கொடுமைகள் தாயான ஈசன்றன் கருணையில் இல்லையாகிக் கழிவதோடு இம்மயக்கமெல்லாம் அற்ற ஆனந்த - பேரின்பப் பெரு வாழ்வில் தேனினும் இனிய தித்திக்கும் தெய்வ வாழ்வில் உயிர்கள் திளைக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறார். இறைவனைக் குறிக்கும்போது காரணங்களெல்லாம் கடந்து நின்றவன்’, ‘கருணைக் கடல் தாய்’, ஒளியுள்ள செல்வன்’, ‘அணி தில்லை அம்பலவன்’ என்று பல வகையில் அருவாயும் உருவாயும் அவன் அமைந்துள்ள நிலைகளையும் அவன் செயற்பாடுகளையும் சுட்டுகிறார். மேலும் அத்தகைய நல்லருளாளன் அடி போற்றும் பேறு அனைவருக்கும் கிடைக்கும் ஒன்றன்று என்பதையும் அவனைப் பாடுவதற்கும் அவ ன ரு ேள வேண்டும் என்பதையும் முன் அகவலில் அவனருளாலே அவன் தாள் வணங்கி’ எனச் சுட்டிய மணிவாசகர் இங்கேயும் நோயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்” என் கின்றார். ஆம்! நல் உயிர்களை அவனே வந்து ஆட் கொண்டு பாடுவிப்பானன்றோ அத்தகைய நல்லுயிரின் நிலையினைப் பெறவே தும்பியாகிய உயிர்களை ஆற்றுப் படுத்துகின்றார் அடிகளார். .

இனி, அடுத்து வருகின்ற பதின்மூன்றாவது பாடலில் தனக்கும் அவனுக்கும் உள்ள உறவினை அவர்கள் இருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/64&oldid=684854" இலிருந்து மீள்விக்கப்பட்டது