பக்கம்:தாய்மை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி - :

உலகரும் எவ்வாறு உணர்ந்து கொள்கிறார்கள் என்பதை உணர்த்தி அதற்கும் அவனே மூல காரணன் எனச் சுட்டி, எல்லாவற்றிற்கும் முதற்காரணன் அவனே என்பதைச் சொல்லி அத் தும்பியைத் தெளிவிக்கிறார். கான்தனக் கன்பின்மை கானும் தானும் அறிவோம் தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாமறிவார்’

என்ற இரண்டு அ டி க ளி ல் இரு வ ர் த ம் அன்பு நிலையினையும் அருள் நி ைல யி ைன யு ம் சுட்டு: இறார். ம ணி வா ச க ர் தன்னைக் .ெ கா டு த் து இறையருள் பெற்ற நிலையினை. வணிக வகையில் கணக் கிடுபவர்; ஒருவேளை குதிரை வாங்கச் சென்ற நிலைபணம் கொடுத்துப் பரி வாங்கும் நிலை-அடிக்கடி அவர் உள்ளத்தில் தோன்றியிருக்கக் கூடும். ஆம்! அதற்குச் சென்றதாலல்லவா- சென்ற பொழுதல்லவா அவர் இறைவனால் வலிய வந்து ஆட்கொள்ளப் பெற்று. உயர்ந்தார். மற்றோர் இடத்திலே இதை நினைத்து, கொள்ளல், கொடுத்தல் வாணிபத்தில் யார் சதுரர்?” என்று வினாவினைத் தானே எழுப்பி, அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றதொன் றென்பால்’ என்று அவரே தானே வாணிபத்தில் அதிகமாகப் பயன் பெற்றவர் எனக் காட்டுகின்றார். இங்கேயும் தான் அன்பில்லா நிலையில் அவன் வந்து ஆட்கொண்ட தன்மை யினைச் சுட்டி, தன்னிடத்து அன்பில்லாத அவல நிலை. யினை அவனும் அவருமே அறிய, அவன் வலிய வந்து ஆட் கொண்ட பெருமையினை அவனியே அறிந்து பாராட்டு வதைப் புகழ்கின்றார் அடிகளார். -

அணுவுக்கணுவாய் அப்பாலுக்காப்பாலாய் இருக்கும் ஒப்பில்லா ஆண்டவன் - அண்டங்களுக்குக் கருவாயும். அ .ே த வேளையில், அவற்றிற்கு அப்புறமாயுமுள்ள ஆண்டவன். தன்னை மானைக் காட்டி மான் பிடிப்பது: போல், மனித வாழ்வில் உள்ள தன்னைப் பற்றிப் பிடித்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/65&oldid=684856" இலிருந்து மீள்விக்கப்பட்டது