பக்கம்:தாய்மை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - தாய்மை

மனித உருவிலே அன்பும் அருளும் கலந்த அம்மையப்பர் திருவுருவிலே அந்தணர் என்பர் அறவோர் என்றபடி அருவான அண்ணலார் அந்தணனாக வந்து ஆண்டு கொண்ட தன்மையினை விளக்கிக் காட்டுகிறார்.

கருவா உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினோடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றுதாய் கோத்தும்பி’ என்பது அடிகளார் திருவாக்கு.

அடுத்த பாடல்களிலெல்லாம் தலைவனாம் இறைவன் தன்னை ஆட்கொண்ட பல்வேறு வகைப்பட்ட பண்பு களையும் முறைகளையும் அவன் தன்மைகளையும் தான் வாழ்ந்த தன்மைகளையும் எண்ணி எண்ணி விளக்குகிறார். எல்லாப் பாடல்களிலேயும் அவர்தம் வாழ்க்கைக் நெறியே கு றி ப் பா கவு ம் வெளிப்படையாகவும் அமைகின்றன. எனினும் அடுத்துவரும் பாடல்களிலே அவர் சற்று விளக்க மாகவே எவ்வெவ்வாறு ஆட்கொள்ளப் பெற்றார் என்பதைத் தும்பியிடம் சொல்லி ஆற்றுப்படுத்துகிறார். இருபது பாடல்களில் பதினெட்டுப் பாடல்களின் முடிவில் ஏகாரமிட்டுத் தேவர்க்கே, மலரடிக்கே, செவடிக்கே, கமலமே’ என்றுமாறு கூறிச் சென்று ஊதப் பணிக் கின்றார். ஒன்றில் கோலமே நோக்கி ஊதச் சொல்லு கின்றார். ஒன்றில் கோன் என்னைக்கூடக் குளிர்ந்து தாய்” என்று தூது அனுப்பும் வகையில் பேசுகின்றார். இவ்வாறு பேசும் நிலையில் அடுத்து வரும் பாடல்களில் வானும் திசை களும் மாகடலுமாய இறைவன் தன் தையலொடு வந்து ஆண்டமையாலேயே தான் அவனுக்கு உற்றவனான தன்மையும் இன்றேல் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுக் கழிந்தொழிந்து மறைந்திருக்க வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்கிறார். தன்மை ஆட் கோண்ட உருவை நினைக்கும்போது அம்மையப்பர்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/66&oldid=684858" இலிருந்து மீள்விக்கப்பட்டது