பக்கம்:தாய்மை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி ,6

உருவே அவர் முன் நிழலிடுகின்றது. அதனாலே தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல் என்கின்றது அவர் வாய். அதே வேளையில் அவனுடைய பேருருவமும் அவன்வழிப் பிற தோற்றங்களும் முன் நிற்க வானும் திசைகளும் மாகடலுமாய பிரான் எனப் பாடுகின்றார். அத்தகைய பெருந் திருஉரு உள்ளப் படாததுதான். ஆயினும் தன் நல்வினை அவனை நினைக்க வைத்தது. உள்குவார் உள்ளத்து மறையாது வந்து அருள் புரியும் தன்மையினை கள்ளப்படாத கனி வந்த வான் கருணை வெள்ளப்பிரான் என்கின்றார். ஆம்! அக் கருணை வெள்ளத்தில் மூழ்கி நின்ற அடிகளார் - அவன் தன்னை ஆட்கொண்ட தன்மையினைச் சொல்லி, அப் பிரானிடம் ஊதுக எனத் தும்பியை அனுப்புகிறார். \

பின்னும் தாழ் வாழ்ந்த முந்திய வாழ்வும் ஆட் கொள்ளப்பெற்ற பின்பு பெற்ற பெருவாழ்வும் மாறி மாறி அவர் முன் நிழலிடுகின்றன. பொய்யை மெய்யென்று கருதி செல்லும் செல்வத்தை நிலை என நினைத்து அதிலேயே அழிந்து கழித்த அந்த நாளை நினைக்கும் போது ஆட்கொண்டு நாய்க்குத் தவிசிட்ட நல்லவன் உரு முன்னிற்கின்றது. ஐயா என் ஆருயிரே, அம்பலவா!’ என்கிறது வாய். இவ்வாறே வண்டினையும் சொல்லச் சொல்லுகிறார். ஆம்! தாம் பெற்ற இன்பம் வையம் பெற விழையும் நல்லுள்ளமல்லவா அவர் உள்ளம்!

அந்த இறைவன் தோற்றம் - அம்மையப்பர் திருஉரு தம்மை மறக்க வைக்கிறது. ஒரு பாதி அம்மையாகவும் மறு பாதி அப்பனாகவும் காணும் அக்கோலத்தில் தம்மை மறந்து பாடுகிறார் அடுத்த பாடலில்,

தோலும் துகிரும் குழையும் சுருள்தோடும். பால்வெள்ளை நீறும பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்கவளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும்பி “

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/67&oldid=684859" இலிருந்து மீள்விக்கப்பட்டது