பக்கம்:தாய்மை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;% தாய்மை

என்று இங்கே இதுவரையில் பல்வேறு வகையில் பாராட்டி, இறைவனின் முழுத் தோற்றத்தினை அறியாத வண்டும் உருவினை நன்கு அறிந்து சென்று ஊதும் வகையில் விளக்கிக் காட்டுகிறார் அடிகளார். வண்டே! நோக்க வேண்டிய திருஉரு இது. நான் என் நிலையில் அவனைப் பற்றி ஏதேதோ பேசிவிட்டேன். உனக்குப் புரிகிறதோ இல்லையோ! இதோ புரியுமாறு சொல்லிவிடுகிறேன் என்ற நிலையில் ஒன்றும் அறியா வண்டிற்கும், அதை முன்னிறுத்தி இவர் தேவர் அவர் தேவர்’ என்று சொல்லி -ஏமாக்கும் மக்களுக்கும் ஒன்றும் அறியா மக்களுக்கும் நன்கு விளங்குமாறு “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்’ என்று பாடுகின்றார். இதோ பார் ஒரு பக்கம் புலித்தோல், கு ன் ட ல ம், திருநீறு, சூலம்-இவை அப்பனின் பொன்னார் திருமேனியைக் காட்டவில்லையா! இதோ மறுபக்கம் பார்! பட்டாடை, தேர்டு, சாந்து, பைங்கிளி, தொக்கவளை - இவை அம்மையின் உருவைக் காட்டவில்லையா! ஆம்! இவை இரண்டும் இயைந்த உருவுடை ஒருவனே தாயாகித் தந்தையாய் என்னை வந்து தாங்கினான்! வண்டே உலக உயிரினமே! நீ சென்று ந்ோக்கிக் குளிர்ந்து ஊதி ஊதி ஊதி உயர் நலம் பெறு வாய் என்று நம் அனைவரையும் ஆற்றுப்படுத்துகின்றார்.

இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இயைந்த ஆடை, காதணி, பூசும்பொருள், கையில் தாங்கிய பொருள் ஆகிய வற்றை வரிசையாகச் சொல்லிய அடிகளார் கடைசியாக அம்மைக்கு உரிய தொக்கவளையினைக் கூறியவர் அதற்கு ஏற்ற ஆடவருக்குரிய அணியினைச் சொல்ல வில்லை; எதைச் சொல்ல முடியும்? பெண்ணின் சிறந்த அணிகலமாகவன்றோ வளை நிற்கிறது. அதன் வழியே அருட்சக்தியினை வியந்து போற்றுகிறார் அடிகள். சக்தியை வியந்தது’ என்ற அடிப்படையில்: பாவை பாடியவர் அல்லரோ இவர். சக்தியாய்ச் சிவமாகித் தனிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/68&oldid=684861" இலிருந்து மீள்விக்கப்பட்டது