பக்கம்:தாய்மை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தாய்மை

இறைவன் அவர் உள்ளத்தில் வந்து வந்து வந்து அமைந்து ஒய்ந்து மேலும் வரவேண்டா வகையில் நிறைந்தான் என்கிறார் அடிகள்.

இனி, திருக்கோத்தும்பியின் கடைசிப் பாட்டிலே அடிகளார் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் அரியும் அயனும் அடிமுடி தேடிய நிலையினையும் தன்னை இறைவன் நாடிவந்த நிலையினையும் சுட்டுகிறார். இப்பகுதியின் முதலியேயே இவர்களையும் பிறரையும் உள்ளடக்கி அனைவரும் காணா அடியை வண்டே நீ காண்’ என்று விளிப்பதுடன் இவ்விறுதிப் பாடலையும் இணைத்துக் காணின் இன்பம் பெருகும். திருமாலும் பிரமனும் தேடிக் காணாது ஏமாறி நிற்க, தானே வந்து தனக்கு அருளிய தன்மையினை நாய் மேல் அம்பாரி’ இட்டதாகச் சுட்டுகிறார். யானை மேல் இட வேண்டிய தவிசு நாய் மேல் இடப்பட்டால் எப்படி இருக்கும் என எண்ணிய அடிகளார் உள்ளம் இறுமாப்பால் விம்முகிறது. இறுமாப்பு என்ற சொல்லுக்குக் கருவம்’ என்று பலர் தற்போது பொருள் கொள்ளுகின்றனர். அது தவறு. இறுமாப்பு இன்ப எல்லையில், தன்னை மறப்பது ஆகும். சமிகுமகிழ்ச்சி’ என்பது பொருள். இறுமாக்கிறேன் என்ற Q3rl off@’ ‘enraptured with spiritual delight’ argr gjib :to be ower joyed’ என்றும் பொருள் காண்கின்றனர். எனவே தான் பெற்ற பேற்றினால் மாணிக்கவாசகர் கருவம் அடைந்தார் என்று கொள்ள முடியாது; தன்னை மறந்த பெருமகிழ்ச்சியில் திளைத்தார் என்றே கொள்ளல் வேண்டும். ஆம்! அதுதான் இறையொடு இயைந்தார் நிலை. - - -

பூமே லயனோடு மாலும் புகலரிதென்று ஏமாறி கிற்க அடியேன் இறுமாக்க காய்மேற் றவிசிட்டு கன்றாய்ப் பொருட்படுத்தத் தீமேனி யானுக்கே சென்று தாய் கோத்தும்பி “

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/70&oldid=684866" இலிருந்து மீள்விக்கப்பட்டது