பக்கம்:தாய்மை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 69

என்பது இந்த பகுதியின் இறுதிப் பாடலாகும். இதில் தன்னை உலகுக்கு உணர்த்தியவன் தலைவனே என்பதை *நன்றாய்ப் பொருட்படுத்த எ ன் ற தொடரினால் குறிக்கின்றார். உலகத்தார்-சைவரும் பிற சமயத்தவரும் நன்றாய்ப் பொருட்படுத்தி இன்று போற்றுவதற்குக் காரணம் இறைவன் தானே வந்து ஆட்கொண்டமை தான். அதைக் கூறி உலகில் என்றும் அறம் தழைக்க அருள் கொழிக்க நாமும் நம் பெயரும் வாழ வேண்டு மானால் அவனருள் பெற வேண்டும் எனச் சுட்டி, அவ்வாறு வாழ வழிகாணுமாறு வண்டினை ஆற்றுப்படுத்தித் தானும் அந்த அரச வண்டும் என்றென்றும் வாழ வழி செய்து விட்டார் அடிகளார்.

இதில் தீமேனியான் என்ற தொடரை இறுதியாக வைக்கின்றார். மேலே அரி யோ டு பி ர ம ைன க் குறித்தமையின் அவர்களோடு தொடர்புள்ள அண்ணா மலையின் அருட்பெருந் தீப்பிழம்பான தன்மையினை இது சுட்டும் என்பர் சிலர். அது தவறும் அன்று. ஆயினும் அதற்கும் மேலாக-மணிவாசகர் பல்வேறு வகைகளில் இ ைற வ ன து தோற்றத்தினையும் வண்ணத்தினையும் வடிவினையும் இதுவரையில் சுட்டிய நி ைல யி .ே ல அனைத்தும் ஒடுங்கும், தீ"யினையும் அதே தன் மேனியாக அமைய வண்ணமும் தன்மையும் கொண்ட சிறப்பினையும் இங்கே சுட்டுகிறார். மேலும் அடியவர் தவறு செய் யாதவர். அப்படிச் செய்தாலும், என் அடியார் இது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார் என்று கூறி அவர்தம் மறச் செயலையும் அறச் செயலாக்கி, எல்லாத் தீமைகளையும் தீயினில் தூசாக்கும் திறனாளனல்லனோ நம் இறை அவனோடு அகலாது அணுகாது நிற்பார் பலர் இருக்க, அவன்ே தேடி வர அவனோடு கலந்த அடிகளாருக்கு அத் தீமேனியானின் செம்மை நன்கு தெரிகிறது. எனவே திமேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி என்று இறுதியாகக் கூறிப் போய பிழையும் புகுதருவான்

5 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/71&oldid=684868" இலிருந்து மீள்விக்கப்பட்டது