பக்கம்:தாய்மை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பழமையான மெய்ச்சமயம்

திருச்சி மாநாட்டு மலருக்கெனக் கட்டுரை எழுதத் த்ொடங்கிய அதே நேரத்தில், 5.12.76 நாளுக்குரிய பவன் இதழைப் (Bhavar’s Journal) பத்திரிகைப் பையன் என் கையில் கொடுத்துச் சென்றான். அதைப் பிரித்துப் பார்த்தேன். தென் ஆபிரிக்கா நாட்டு அறிஞர் ஒருவர் (Shri Ranji S. Nonbath)* @ # g g lo u lh lub pl குறிப்பிட்டு, அதில் புரியாத புதிர்களும், மயக்க உணர்வு களும் உள்ளன எனக் கூறிப் பிற சமயங்கள் காட்டுவது போன்று பயிலும் நூல், தெளிந்த தெய்வப் பெயர், வழி காட்டும் வல்லவர் போன்றவர்கள் இந்து சமயத்தில் இல்லை எனக் குறைபட்டுள்ளார். அதனையும், அதற்குத் திரு எஸ். இராம கிருஷ்ணன் அவர்கள் எழுதிய பதிலையும் படித்தேன். தெய்வநெறிக் கொள்கையினையும் சமய உண்மைகளையும் அறிந்துகொள்ளாது எங்கோ இருந்து யாரோ குறை கூறினாலும், நல்ல சமயவாதிக்கு அது உள்ளத்தைச் சுடும் ஒன்றாக மாறுகின்றமையின் அதற்குப் பதில் கூறுமுகத்தான் இக் கட்டுரையை அமைத்துக் கொள்கிறேன். . .

{ இந்து சமயம் காலத்தால் தொன்மை வாய்ந்தது. வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே’, ‘திசை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக்

Bhavans Journal (5 - 12 - 76) Page 15 - 17. The Riddle & Mystery of Hinduism by Rantji S. Nowbath Reply by S. Rama Krshnan – Thoughts in Riddles—

- . (P. 17-20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/73&oldid=684871" இலிருந்து மீள்விக்கப்பட்டது